MAP

வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்கள்   (ANSA)

வன்முறையால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் பகுதி மக்களுக்கு திருத்தந்தையின் செய்தி

ஆகஸ்டு 24 ஞாயிறன்று துன்புறும் உக்ரைன் நாட்டிற்காக செபிப்பதற்காக, “உக்ரைனுக்காக உலகளாவிய செபம்” என்ற புதிய ஆன்மிக முயற்சியை ஆரம்பித்துள்ள மக்களுடன் இணைந்து, துன்புறும் அந்நாட்டிற்கு இறைவன் அமைதியை வழங்க செபிப்போம் – திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாதுகாப்பற்றச் சூழல் மற்றும் வன்முறையினால் ஏராளமான உயிரிழப்புக்களையும், இடம்பெயர்வுகளையும் அனுபவித்து வரும் மொசாம்பிக்கின் கபோ டெல்கதோ மக்களுக்குத் தனது ஆழ்ந்த நெருக்கத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 24, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

வன்முறை மற்றும் இடம்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நாம் மறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், நாட்டில் பாதுகாப்பையும், அமைதியையும் மீட்டெடுப்பதற்காக நாட்டின் தலைவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஆகஸ்டு 22, வெள்ளிக்கிழமையன்று, போர்களால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்காக செபித்து, செபம் மற்றும் நோன்பிற்கான நாளை அனுசரித்ததை நினைவுகூர்ந்த திருத்ததை அவர்கள், ஆகஸ்டு 24, ஞாயிறன்று துன்புறும் உக்ரைன் நாட்டிற்காக செபிப்பதற்காக, “உக்ரைனுக்காக உலகளாவிய செபம்” என்ற புதிய ஆன்மிக முயற்சியை ஆரம்பித்துள்ள மக்களுடன் இணைந்து, துன்புறும் அந்நாட்டிற்கு இறைவன் அமைதியை வழங்க செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார்.

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஆகஸ்ட் 2025, 13:00