MAP

திருத்தந்தையை சந்தித்த டயான் ஃபோலி திருத்தந்தையை சந்தித்த டயான் ஃபோலி  (@VATICAN MEDIA)

திருத்தந்தையை சந்தித்த டயான் ஃபோலி

கடவுளின் அருளாலும், நல்ல உள்ளம் படைத்த மக்களின் உதவியாலும், James W. Foley Legacy Foundation நிறுவனத்தின் வழியாக 170-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மீண்டும் சுதந்திரமாக வீடு திரும்பியுள்ளனர் - டயான் ஃபோலி.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

திருத்தந்தையுடனான அவரது சந்திப்பு  ஒரு வரம் என்றும், உலகின் அமைதி மற்றும் நம்பிக்கைக்கு திருத்தந்தை அவர்களின் தலைமை மிகவும் தேவை என்றும், திருத்தந்தைக்காக தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார் டயான் ஃபோலி.

அமெரிக்க பத்திரிகையாளர் Jim Foley அவர்கள், ISIS   பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட  பின், அவரது தாய் டயான் ஃபோலி தனது மகனின் நினைவாக  American Mother என்ற புத்தகத்தை எழுதி, அதனை திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்தபோது அவருக்கு வழங்கினார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் கொலோம் மெக்கானுடன் இணைந்து எழுதப்பட்ட அமெரிக்கன் மதன் என்ற இந்த நூல், கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜிமின் அவர்களின்  உருவத்தையும், தாயின் துயரப் பயணத்தையும், இரக்கமும் நம்பிக்கையும் நிறைந்த சாட்சியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

தனது  மகன் அவர்களைக் கொன்றவர்களில் ஒருவரான அலெக்ஸாண்டா கோட்டேயைச் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்த டயான் அவர்கள், பத்திரிக்கையாளர்  “ஜிம் குற்றமற்ற அமைதியின் மனிதர் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பத்திரிக்கையாளர் ஜிம் அவர்கள், Teach for America என்ற அமைப்பில்  ஏழை இளைஞர்கள் பலரை  வழிநடத்திய ஆசிரியர் என்றும், சிரியாவில் மக்களின் குரலை உலகுக்கு கொண்டு சென்றவரும் அவரே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் தாய் டயான்.

பத்திரிக்கையாளர் ஜிம் கொல்லப்பட்ட  மூன்று வாரங்களுக்குள் James W. Foley Legacy Foundation தொடங்கப்பட்டதாகவும், வெளிநாட்டில் கடத்தப்பட்டோர்கள் மற்றும் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டோரின் விடுதலைக்காக   அரசுக்கு   குரல் கொடுப்பதும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதுமே இதன் நோக்கம் என்றும் டயான் தெரிவித்துள்ளார்.

எந்த வித அரசு உதவியுமின்றி, கடவுளின் அருளாலும், நல்ல உள்ளம் படைத்த  மக்களின் உதவியாலும், இந்நிறுவனத்தின் வழியாக 170-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மீண்டும் சுதந்திரமாக வீடு திரும்பியுள்ளனர் என்றும், பத்திரிகையாளர்கள் இன்று தங்களை பாதுகாக்கும் அவசியத்தை அதிகம் உணர்ந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் டயான்.

இறைவேண்டலும், இறைவன் மீது வைத்த  நம்பிக்கையும் மட்டுமே தன்னைக் காத்தன என்று கூறிய டயான் அவர்கள், தன் மகன் கொல்லப்பட்டபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  தொலைபேசி அழைப்பு, மிகுந்த ஆறுதல் மற்றும் ஆசீராக  அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,தான் எழுதிய கதை உண்மையில் ஓர் இரக்கத்தின்  கதை என்றும்,  குறைகளுடன் வாழும் நமக்கு கடவுளின் இரக்கம் தேவை என்றும் டயான் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஆகஸ்ட் 2025, 12:51