MAP

கோடை விடுமுறைக்காகக் காஸ்தல் கந்தோல்போ இல்லத்தில் திருத்தந்தை

ஜூலை 6, ஞாயிறு மாலை வத்திக்கானில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், மாலை 5 மணியளவில் காஸ்தல் கந்தோல்போ இல்லம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்காகக் காத்திருந்த மக்கள் பலர் அவரை மகிழ்வோடுக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கோடை விடுமுறைக்காக காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்திற்கு வந்த திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்வோடுக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

ஜூலை 6, ஞாயிறு மாலை வத்திக்கானில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், மாலை 5 மணியளவில் காஸ்தல் கந்தோல்போ இல்லம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்காகக் காத்திருந்த மக்கள் பலர் அவரைக் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.   

வாகனத்தில் காஸ்தல் கந்தோல்போ இல்லத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், தன்னை வரவேற்கக் காத்திருந்த மக்களைக் கண்டதும் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று அவர்களை வாழ்த்தினார். சிறுகுழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், அருள்சகோதரிகள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அனைவருக்கும் நன்றி கூறி இல்லத்திற்குள் நுழைந்தார்.

மக்கள் எதிர்பாராத வேளையில் இல்லத்தின் நடுமாடத்தின் மேல் பகுதியில் தோன்றிய திருத்தந்தை அவர்கள் அங்கிருந்து மக்களைக் கரமசைத்து வாழ்த்தினார். கோடை விடுமுறை இல்லத்தைத் திருத்தந்தைக்கான ஏற்பாடு செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றியையும், குறிப்பாக வில்லானோவாவின் பங்குத்தளப் பணியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

"காஸ்தல் கந்தோல்போவில் தங்கியிருந்து தனது கோடை விடுமுறையைக் கழிப்பது குறித்த மகிழ்ச்சியை திருத்தந்தை அவர்கள் உறுதிப்படுத்தியதாகவும், வரவிருக்கும் நாட்களில் இவ்வளவு அழகான இடத்தில் தனது செயல்பாட்டைத் தொடரக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு நன்றி மனநிலையுடன் இருப்பதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூலை 2025, 12:58