உங்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மறைக்கல்வியாளர்கள் (Catechists) அனைவரும் தங்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென அழைப்பொன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 9, இப்புதனன்று, பராகுவேயின் அசுன்சியனில் கூடியுள்ள SCALAவின் 13-வது சாதாரண சபை மற்றும் 10-வது படிப்பு நாட்களின் (13th Ordinary Assembly and 10th Study Day) பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
மறைக்கல்வி படிப்பினையின் மையமான நாசரேத்தின் இயேசுவை மையமாகக் கொண்டு தங்கள் பணியைச் செய்ய மறைக்கல்வியாளர்களை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, இயேசுவின் மீதான தங்கள் அன்பை ஆழப்படுத்தமாறும், நற்செய்தி அறிவிப்பிற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்ளுமாறும் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
1995- ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SCALA, இலத்தீன் அமெரிக்க மறைக்கல்வி கற்பிக்கும் கற்றறிவாளர்களை ஒன்றிணைத்து வருகின்றது.
பராகுவேயின் அசுன்சியனில் ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி இடம்பெற்றுவரும் இக்கூட்டம் ஜூலை 11-ஆம் தேதி நிறைவடைகின்றது. இது மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒன்றிணைந்த பயணத்தின் (synodal journey) பின்னணியில், இறையியல் ரீதியாக மறைக்கல்வியாளர்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்