MAP

திருத்தந்தையுடன்  உரையாடும்  அல்ஜீரியா குடியரசுத் தலைவர் திருத்தந்தையுடன் உரையாடும் அல்ஜீரியா குடியரசுத் தலைவர்  (ANSA)

அல்ஜீரியக் குடியரசு அதிபர் திருத்தந்தையுடன் சந்திப்பு!

அல்ஜீரியா குடியரசின் தலைவர் திரு. அப்தெல்மக்ஜித் டெபவுன் (Mr. Abdelmagjid Tebboun) அவர்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை வத்திக்கானில் சந்தித்து உரையாடினார். அப்போது திருப்பீடத்திற்கும் அந்நாட்டிற்குமான தூதரக உறவின் முன்னேற்றம் குறித்தும் பேசப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூலை 24, இவ்வியாழக்கிழமையன்று, அல்ஜீரியா குடியரசின் தலைவர் திரு. அப்தெல்மக்ஜித் டெபவுன் அவர்கள் வத்திக்கானில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்து உரையாடினார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இச்சந்திப்பிற்குப் பிறகு அல்ஜீரிய அதிபர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலாளர்  பேரருள்திரு Daniel Pacho அவர்களையும் சந்தித்து உரையாடினார் என்று தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

திருப்பீடச் செயலகத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பின்போது, திருப்பீடத்திற்கும் அல்ஜீரியா குடியரசுக்கும் இடையிலான நலமான தூதரக உறவுகள் குறித்தும், அந்நாட்டின் வளர்ச்சிக்குத் தலத் திருஅவையின் பங்களிப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டன என்று மேலும் தெரிவிக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

இறுதியாக, தற்போதைய புவிசார் அரசியல் நிலைமை குறித்தும், உலகில் அமைதி மற்றும் உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்புவதில் மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் உரைக்கிறது அதன் அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜூலை 2025, 13:24