இத்தாலிய அரசுத் தலைவருக்கு திருத்தந்தை வாழ்த்து!
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஜூலை 23, இப்புதனன்று, தனது 84-வது பிறந்த நாளைச் சிறப்பித்த இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இத்தாலி நாட்டின் ஒற்றுமைக்காகத் தியாக மனதுடன் மத்தரெல்லா அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக தனது இறைவேண்டல்களையும் உறுதிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
மேலும், இத்தாலிய மக்களின் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக அவர் ஆற்றிவரும் சோர்வற்ற சிறந்த பணிகளுக்காக அவரை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, இத்தாலிய அரசுத் தலைவர் மத்தரெல்லா அவர்களை அன்னை கன்னி மரியாவிடம் ஒப்படைத்து, அவரது குடும்பத்தினர், உடன் பணியாளர்கள் மற்றும் இத்தாலிய நாடு முழுவதற்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்