உங்களின் அழுகுரல் கடவுளின் இதயத்தை எட்டியுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்களின் அழுகுரல் கடவுளின் இதயத்தை எட்டியுள்ளது! என்று ஓர் இதழ் ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை மாத Piazza San Pietro என்ற இதழில், மூன்று குழந்தைகளின் இளம் தாயான ஜைரா என்பவர், அமைதிக்கான உரிமைக் குறித்து துணிவுடன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மேலும் "போரினால் எல்லாம் அழிந்துவிட்டால் நமக்கு என்ன நடக்கும்?" என்று கேட்கும் Benevento-வைச் சேர்ந்த இளம் தாயான ஜைராவின் இதயப்பூர்வமான கேள்விக்குப் பதிலளித்துள்ள திருத்தந்தை, உங்களின் வார்த்தை, "கடவுளின் இதயத்தை அடையும் ஓர் அழுகை" என்றும், அமைதி என்பது வெறும் ஆசை மட்டுமல்ல, அன்றாடத் தனிப்பட்ட பொறுப்பு என்றும் அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
விசுவாசிகள் மற்றும் விசுவாசிகள் அல்லாதவர்கள் அனைவரும், உள் மாற்றத்தைத் தேடவும், உரையாடல், இறைவேண்டல் மற்றும் துணிவுமிகு செயல்கள் வழியாக, அமைதியை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கும் விதமாக அதிகாரத்தை விடுத்து, மோதலில் "சந்திப்பு கலாச்சாரத்தை" வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, "போர் ஒருபோதும் வெற்றிபெறாது", மேலும் குழந்தைகள் உண்மையான மற்றும் நீடித்த அமைதிக்குத் தகுதியானவர்கள்" என்ற அவரின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்