MAP

திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட இரண்டு மின்வாகனங்கள் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட இரண்டு மின்வாகனங்கள்  

திருத்தூதுப் பயணங்களுக்கு உதவியாக இரண்டு மின்வாகனங்கள் நன்கொடை

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வெளிநாட்டு திருத்தூதுப் பயணங்களுக்கு உதவியாக இரண்டு மின்வாகனங்களை நன்கொடையாக அளிக்கப்பட்டன.

சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்

இத்தாலிய நிறுவனமான எக்ஸெலென்ஷி மற்றும் வத்திக்கான் நகர மாநிலத்தின் ஜென்டார்மெரி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இரண்டு சிறிய மின்வாகனங்கள் திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

ஜூலை 3, வியாழனன்று காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லத்தில் நடந்த ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டதாக ஜூலை 6 அன்று வெளியிடப்பட்ட ஒசர்வாத்தோரே ரொமானோ என்னும் இத்தாலிய பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

பொறியியல் வடிவமைப்பு, உயர் மட்ட இயந்திர, மின்னணு உற்பத்தி மற்றும் சிறந்த நிபுணத்துவத்தின் இணைப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்த மின்வாகனமானது திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்களின்போது உதவும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதாவது நீண்ட தூர பகுதிகளுக்குச் செல்லும்போது பிரிக்கப்படாமல் முழுவதுமாக அப்படியே விமானங்களில் கொண்டு செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சத்தம் அல்லது மாசுக்களை வெளியிடாதவாறு முழுமையாக  மின்வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்களும்  திருத்தந்தையின்  குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், இன்னும் குறிப்பாக, வாகனத்தில் ஏறும்போதும் வெளியேறும்போதும் உதவும் வகையில் பாதுகாப்பான பிடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் முன் கைப்பிடி மற்றும் அமர்வதற்கு ஏற்ற பக்கவாட்டு ஆதரவுகளைச் சேர்த்து வாகனத்தின் உடல்பகுதியானது வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மின் வாகனங்களின் ஒவ்வொரு கட்டத்தையும் மேற்பார்வையிடுவதில் ஜென்டர்மேரி நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளனர். குறிப்பாக பன்னாட்டு பயணங்களின் போது சிறப்பாக செயல்படும் நோக்கில், அதிகபட்ச செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இம்மின் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூலை 2025, 12:55