MAP

காசாவின்மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் காசாவின்மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்  

உரையாடலுக்காகவும் அமைதிக்காகவும் செபியுங்கள்!

இவ்வளவு மோதல்களும் போர்களும் நிறைந்த சூழலை, உலகம் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது : திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அமைதிக்காக இறைவேண்டல் செய்யவும், அனைத்துத் தரப்பினரும் உரையாடலை மேற்கொள்ளவும், ஆயுதங்களை விடுத்து அமைதியை ஏற்படுத்தவும் அழைப்பொன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 20, இஞ்ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவிலுள்ள அல்பானோ பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு திருத்தந்தையர் இல்லம் திரும்பிய வழியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

இவ்வளவு மோதல்களும் போர்களும் நிறைந்த சூழலை, உலகம் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது என்று தனது பெரும் கவலையையும் அச்செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பின்னர் ஜூலை 18, இவ்வெள்ளியன்று, இஸ்ரேலிய அரசுத் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் திருத்தந்தை நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மோதலை முடிவுக்குக் கொண்டுவர "புதுப்பிக்கப்பட்ட உந்துதலை" வலியுறுத்தியதுடன், துயருறும் காசாவின் பொதுமக்கள் நிலைகுறித்து பெரிதும் வருந்தினார்.

மேலும் அனைத்து மதங்களின் புனித இடங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவரிடம் வலியுறுத்தியதாகவும், மக்களையும் புனித இடங்களையும் மதிக்க வேண்டும், வன்முறை மற்றும் வெறுப்பை விட்டுவிட முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூலை 2025, 12:39