MAP

கிராகோவில், தங்கள் பொது பேரவைக்காகக் ஒன்றுகூடியுள்ள புனித தொமினிக் துறவு சபையினர் கிராகோவில், தங்கள் பொது பேரவைக்காகக் ஒன்றுகூடியுள்ள புனித தொமினிக் துறவு சபையினர்  

புனித தொமினிக் வழியில் திருஅவைக்குப் பணியாற்றுங்கள்!

"உடன்பிறந்த உறவு, இறைவேண்டல் மற்றும் தொமினிக்கன் வாழ்க்கை முறை மூலம் திருஅவைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளை இன்னும் வலுப்படுத்துங்கள்" - திருத்தத்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"உங்கள் ஆழ்ந்தாராய்வுகள் திருஅவையை உண்மையின் முழுமையில் வழிநடத்தும் தூய ஆவியாருக்குச் செவிமடுக்க உங்களை அனுமதிக்கட்டும்" என்றும், "புனித தொமினிக் தேர்ந்தெடுத்த நற்செய்தி அறிவிப்பு வாழ்க்கை முறையில், கிறிஸ்துவின் திருவுடலாகிய திருஅவைக்கு சேவை செய்வதற்கான உங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவீர்களாக! என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கிராகோவில், புனித தொமினிக் துறவு சபையினர் தங்கள் பொது பேரவைக்காகக் கூடியிருக்கும் வேளை, அவர்களின் தலைவர் அருள்பணியாளர் Gerard Timoner அவர்களுக்குத் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, தனது செபத்தையும் உடனிருப்பையும் வழங்கியுள்ளார்.

தூய ஆவியாரின் குரலுக்குக் கவனமுடன் செவிமடுத்து, குறிப்பாக, கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், விசுவாசிகள், கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட நான்கு முக்கிய குழுக்களுக்கு இறைவார்த்தையைப் போதிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்ளும்படி அவர்களை ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

மேலும் உடன்பிறந்த உறவு, இறைவேண்டல் மற்றும் தொமினிக்கன் வாழ்க்கை முறை மூலம் திருஅவைக்கு அவர்கள் ஆற்றிவரும் பணிகளை இன்னும் வலுப்படுத்துமாறு அவர்களை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, அவர்கள் அனைவரையும் அன்னை கன்னி மரியாவிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகக் கூறி தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூலை 2025, 11:45