MAP

திருத்தந்தை மற்றும் பிரதமர் நெதன்யாகு திருத்தந்தை மற்றும் பிரதமர் நெதன்யாகு   (AFP or licensors)

இஸ்ரயேல் பிரதமருடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இஸ்ரயேல் பிரதமர் நெதன்யாகு அவர்களிடம் மேற்கொண்ட உரையாடலில், போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் தொலைப்பேசியில், போரினை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி உரையாடினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 18, வெள்ளிக்கிழமை காலை, இஸ்ரயேல் இராணுவத்தால் காசாவின் திருக்குடும்ப கத்தோலிக்க கோவில் பங்குதளம் தாக்குதலுக்கு உள்ளானதை முன்னிட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டு அங்கு நிலவி வரும் சூழல் குறித்து அறிந்துகொண்டார் திருத்தந்தை.

பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான நிலைமை குறித்த தனது கவலையை மீண்டும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வழிபாட்டுத் தலங்களையும் அனைத்து மக்களையும் பாதுகாப்பதன் அவசரத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

காஸ்தல் கந்தோல்போ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தில் தனது விடுமுறையைக் கழித்துக்கொண்டிருக்கும் திருத்தந்தை அவர்கள் பிரதமர் நெதன்யாகு அவர்களிடம் மேற்கொண்ட உரையாடலில், போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, போர் நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பித்தார்.

காசாவில் உள்ள மக்களின் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை அவர்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் போரினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூலை 2025, 13:38