MAP

பாதிக்கப்பட்ட வணிகக் கட்டிடம் பாதிக்கப்பட்ட வணிகக் கட்டிடம்  

ஈராக் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தந்திச்செய்தி

ஈராக்கின் குட் நகரில் உள்ள 5 அடுக்கு வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏறக்குறைய 60 பேர் உயிரிழந்துள்ளனர், 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஈராக்கின், குட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் அனைவருக்கும் தனது ஆன்மிக உடனிருப்பை வழங்குவதாக இரங்கல் தந்திச்செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 19, சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இரங்கல் தந்திச்செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

தீ விபத்தில் இறந்தவர்களின் ஆன்மாவை இரக்கமுள்ள இறைவனின் அன்பில் ஒப்படைத்து செபிப்பதாகவும், மீட்புப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகவும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

எல்லாவற்றிற்கும் மேலாக, தூய இறைவனின் வலிமை, ஆறுதல், மற்றும் அமைதியின் இறை ஆசீரை அனைவரும் பெற தொடர்ந்து செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஈராக்கின் குட் நகரில் உள்ள 5 அடுக்கு வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏறக்குறைய 60 பேர் உயிரிழந்துள்ளனர் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூலை 2025, 13:18