MAP

கீழை வழிபாடு முறை திருஅவையினருக்கான யூபிலியின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ (கோப்புப்படம்) கீழை வழிபாடு முறை திருஅவையினருக்கான யூபிலியின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ (கோப்புப்படம்)  (@Vatican Media)

மேய்ப்புப்பணிப் புதுப்பித்தல் பணிகளைத் துணிவுடன் ஆற்றுங்கள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிட்ஸ்பர்க்கில் உள்ள கிரேக்கக் கத்தோலிக்கத் தலத்திருஅவையினரின் மூன்றாவது பெருநகரக் கூட்டமானது அமெரிக்க ஐக்கிய நாட்டின் இந்தியானா பகுதியில் உள்ள Saint Mary in Whiting பகுதியில், “வாருங்கள், கிறிஸ்துவை வணங்கி ஆராதிப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பல்வேறு சவால்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வட அமெரிக்காவில் துடிப்பான கிரேக்கக் கத்தோலிக்க சமூகங்களை கட்டியெழுப்பிய முன்னோர்களின் சான்றுள்ள வாழ்வையும், அவர்களுடனான தொடர்பையும் வளார்த்தெடுக்க வேண்டும் என்றும், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையில் வேரூன்றிய மேய்ப்புப்பணிப் புதுப்பித்தல் பணிகளைத் துணிவுடன் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 19, சனிக்கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிட்ஸ்பர்க்கில் உள்ள கிரேக்கக் கத்தோலிக்கத் தலத்திருஅவையினரின் மூன்றாவது பெருநகரக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பெருநகர பேராயர் வில்லியம் ஸ்குர்லா மற்றும் சங்கத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டமானது அமெரிக்க ஐக்கிய நாட்டின் இந்தியானா பகுதியில் உள்ள Saint Mary in Whiting பகுதியில், “வாருங்கள், கிறிஸ்துவை வணங்கி ஆராதிப்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகின்றது.

டொராண்டோவின் உயர்தலைவர் மற்றும் கிழக்கு திருஅவைகளுக்கான திருப்பீடத்துறைப் பிரதிநிதிகளுடன், அருள்பணியாளர்கள், நம்பிக்கை நிறைந்த பொதுநிலையினர்கள், துறவறத்தார் இணைந்து பங்கேற்பது திருஅவையில் ஒற்றுமையின் ஒரு புலப்படும் அடையாளத்தை வழங்குகிறது என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

தனது சிறப்பு செபத்தையும் உடனிருப்பையும் அவர்களுக்கு உறுதியளித்த திருத்தந்தை அவர்கள், கடவுளின் தாயான தூய கன்னி மரியாவின் பரிந்துரையில் அவர்களை ஒப்படைத்து செபிப்பதாகவும், இறைவனில் ஞானம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை மறைமாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஜூலை 2025, 13:21