MAP

2022.06.25 L'Osservatore di strada பத்திரிக்கை 2022.06.25 L'Osservatore di strada பத்திரிக்கை 

பத்திரிக்கையாளர்களின் இரக்கமும் பணிவும் ஒரு விலைமதிப்பற்ற பரிசு

கடை நிலையிருப்பவர்களையும் கதாநாயகர்களாக, முக்கியமானவர்களாக மாற்றும் பத்திரிக்கையாளர்களின் பணிக்கு நன்றி - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

L'Osservatore di strada பத்திரிக்கையாளர்களின் பணி மிகவும் முக்கியமானது. ஏனெனில் உலகைத் தெருக்களில் இருந்து பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள இவ்விதழ் உதவுகின்றது என்றும், பத்திரிக்கையாளர்களின் இரக்கமும் பணிவும் நம் அனைவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற பரிசு, கடினமான காலங்களில் கூட அவர்களின் நம்பிக்கை திருஅவைக்கும் உலகத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

“L'Osservatore di strada” என்ற இத்தாலிய மாதாந்திர இதழின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

2022 -ஆம் ஆண்டு ஜூன் 29, அன்று முதல் இதழ் வெளியிடப்பட்ட L'Osservatore di stradaவின் மாதாந்திர இதழின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கடை நிலையிருப்பவர்களையும் கதாநாயகர்களாக, முக்கியமானவர்களாக மாற்றும் அவர்களது பணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வத்திக்கான் வளாகத்தில் கூடும் திருப்பயணிகள் அனைவருக்கும் இதழை இலவசமாக வழங்கி திருத்தந்தையின் மூவேளை செப உரைக்கு முன்னும் பின்னும் விவேகத்துடன் செயல்படுவதற்காக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

L'Osservatore di strada பத்திரிக்கையாளர்களின் பணி மிகவும் முக்கியமானது. ஏனெனில் உலகை தெருக்களில் இருந்து பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள இவ்விதழ் உதவுகின்றது என்றும், இதன் வழியாக நமது கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான துணிவு, உண்மையாகவும் ஆழமாகவும் பார்த்தல், குரலற்றவர்களின் குரலைக் கேட்டல், அதனைத் தடுக்கும் வடிவங்கள் மற்றும் மரபுகளை உடைத்தல் போன்றவற்றைப் பெற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளை எப்போதும் நம்மில் அடையாளம் காண்போம். நமது கதைகளில் உள்ள அவரது  கரம், மற்றும் அன்பில் நாம் நம்பிக்கைக் கொண்டால், எல்லாம் எவ்வாறு மீட்கப்படுகிறது என்பதற்கும், எந்தக் கதையும் நம்பிக்கையற்றது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக அது திகழும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

"மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுபவர்கள் பேறுபெற்றவர்கள், ஏனெனில் அவர்கள் இரக்கத்தைப் பெறுவார்கள்" என்ற புனித அகுஸ்தீனின் எட்டு பேறுபெற்றவர்கள் என்ற மறையுரையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், பத்திரிக்கையாளர்களின் இரக்கமும் பணிவும் நம் அனைவருக்கும் ஒரு விலைமதிப்பற்ற பரிசு, கடினமான காலங்களில் அவர்களின் நம்பிக்கை திருஅவைக்கும் உலகத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூலை 2025, 13:00