சோதனைகளில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் கடவுள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சபையின் நிறுவனரான அருள்சகோதரி மரிய தெரசாவைப் பின்பற்றி, சோதனைகளில் பொறுமையைக் கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும், ஏனெனில் நமது சோதனைகளில் தான் கடவுள் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூலை 5, சனிக்கிழமை வத்திகானில் இயேசு மற்றும் அன்னை மரியாவின் ஊழியர்களான அகுஸ்தீனிய சபை அருள்சகோதரிகளை அவர்களது மறைமாநிலப் பேரவையை முன்னிட்டு சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
maறைப்பணியில் துணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனெனில் கல்விப்பணியில் முழு அர்ப்பணத்துடன் நாம் நம்மை அர்ப்பணிக்கும்போது கேட்கும் திறன் கொண்ட ஞானமுள்ள மனங்களையும் இதயங்களையும் மனித குலத்தின் மீதான ஆர்வத்தையும் அது நம்மில் உருவாக்கும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
வழியும், உண்மையும், வாழ்வுமான இயேசு கிறிஸ்துவே நமது அனைத்து கலாச்சார முயற்சிகளின் அளவுகோளாகவும் இருக்கின்றார் அவரைப் பின்பற்றுவதில் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உண்மை இல்லாத ஒரு கலாச்சாரம் ஆற்றல் மிக்கவர்களின் கருவியாக மாறுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
உண்மையற்றக் கலாச்சாரமானது நமது ஆழ்மனநிலைகளை விடுவிப்பதற்குப் பதிலாக, குழப்பத்தையும், வணிகப்போக்குகளுக்கு ஏதுவான போக்குகளில் நமது மனதை செலுத்தும் நிலையையும் ஏற்படுத்தி விடுகின்றன என்றும், உலக வெற்றியின் நலன்களுக்கு ஏற்ப நம் மனங்களைக் குழப்பி திசைதிருப்புகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
நமது வெளிப்புறக் கற்பித்தல் எப்போதும் நமக்குள் இருக்கும் ஆசிரியரான இயேசுவை சந்திக்க வழிவகுக்கும் என்று வலியுறுத்தும் புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளை வாசித்து சிந்தித்து தியானித்து வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக் கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்