MAP

ஆயர்கள் அணியும் தொப்பி ஆயர்கள் அணியும் தொப்பி 

இந்தியாவின் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

இந்தியாவின் கேரள மாநிலம் Palai மறைமாவட்டத்தில் உள்ள Kalaketty என்னும் ஊரில் 1962-ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று பிறந்தவர் புதிய ஆயர் Jose Sebastian Thekkumcherikunnel.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இந்தியாவின் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக Jose Sebastian Thekkumcherikunnel அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 7, சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி Phagwara ஆலயப் பங்குத்தந்தையாகவும் ஜலந்தர் மறைமாவட்ட பொருளாளராகவும் பணியாற்றி வந்த அருள்பணி Jose Sebastian Thekkumcherikunnel அவர்களை ஜலந்தர் மறைமாவட்டத்திற்கான புதிய ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்தியாவின் கேரள மாநிலம் Palai மறைமாவட்டத்தில் உள்ள Kalaketty என்னும் ஊரில் 1962-ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று பிறந்தவர். நாக்பூரில் உள்ள புனித சார்லஸ் குருமடத்தில் தத்துவயியல் மற்றும் இறையியல் பயின்று, 1991-ஆம் ஆண்டு மே 1 அன்று ஜலந்தர் மறைமாவட்ட அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு பெற்றவர் புதிய ஆயர் Jose Sebastian Thekkumcherikunnel.   

உரோம் உர்பானோ திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திருஅவைச்சட்டத்தில் முதுகலைக்கல்வி கற்றவர், ஜலந்தூர் மறைமாவட்டத்தின் துணைவேந்தர், மறைக்கல்வி இயக்குநர், ஜலந்தூரில் உள்ள தமத்திரித்துவக் கல்லூரியின் தத்துவயியல் துறை தலைவர், கிறிஸ்து அரசர் பள்ளி இயக்குநர் என பலபொறுப்புக்களை ஆற்றியவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜூன் 2025, 13:32