ஆஸ்திரேலியா, தொமினிக்கன் குடியரசு நாட்டிற்கான புதிய அரசுத்தூதர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜூன் 3, செவ்வாய்க்கிழமை தொமினிக்கன் குடியரசு நாடு மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான புதிய அரசுத்தூதர்களைச் சந்தித்து அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
1971-ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று பிறந்தவரான Victor Valdemar SUÁREZ DÍAZ அவர்களை தொமினிக்கன் குடியரசு நாட்டின் அரசுத்தூதராக நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று பிறந்தவரான Keith John Pitt அவர்களை ஆஸ்திரேலியாவிற்கான அரசுத்தூதராக நியமித்துள்ளார் திருத்தந்தை.
தொமினிக்கன் குடியரசு நாடு மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான அரசுத்தூதர்களாக வத்திக்கானில் பணியாற்ற வந்திருக்கும் அதிகாரிகளின் நியமனச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை 14-ஆஅம் லியோ அவர்கள், புதிய அரசுத்தூதர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா விற்கான அரசுத்தூதர் Keith John Pitt
குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர், துணைப் பிரதமரின் துணைச் செயலாளர் (2016), வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுக்கான துணைச் செயலாளர் (2016 - 2017), துணைப் பிரதமரின் துணைச் செயலாளர் (2018), நீர் வள அமைச்சர் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கான அமைச்சர் (2020 - 2021) (அமைச்சரவை), நீர்வள அமைச்சர் (2021 - 2022) (அமைச்சரவை), மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் (ஹிங்க்லர் தொகுதி) (2013 - 2024) ஆகிய பல பொறுப்புக்களை வகித்துள்ளார்.
தொமினிக்கன் குடியரசு நாட்டின் அரசுத்தூதர் Victor Valdemar SUÁREZ DÍAZ
தொமினிக்கன் குடியரசின் சந்தியாகோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (UTESA) பயின்றவர், சட்டவியலில் இளங்கலை பட்டம் (1996 - 2000), பன்னாட்டு உறவுகளில் முதுகலைப் பட்டம் (2012 - 2014) மற்றும் தேசிய பொது வழக்குரைஞர் பள்ளியில் டொமினிக்கன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பட்டயப்படிப்பு பெற்றுள்ளார்.
அமைச்சரவைத் தலைவர், பொது அமைச்சகம் (2004 - 2006), தொமினிக்கன் தொமினிக்கன் குடியரசில் 2006 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல ஆணையங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்