தாழ்ச்சியுடனும், செவிமடுப்பவர்களாகவும் செயல்படும் அவசியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருப்பீடத் தூதரகப் பணிகளில் பயிற்சி பெறும் அருள்பணியாளர்கள், தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக ஓராண்டு மறைப்பணிச் சேவைகளை முடித்துத் திரும்பியதை முன்னிட்டு அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
திருப்பீடத் தூதரக பயிற்சிக் கல்விக் கழகத்தின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களின் அருள்பணித்துவ வாழ்வு, அவர்கள் திருஅவையால் அனுப்பப்படும் இடங்களில் தாழ்ச்சியுடனும், மக்களுடனான அருகாமையுடனும், விசுவாசத்துடனும் இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திருப்பீடத்தின் தூதரகப் பணிகளுக்கென பயிற்சி பெறும் அருள்பணியாளர்கள், தூதரகப்பணிக்கோ அல்லது மறைப்பணித்தளங்களுக்கோ என எங்கு அவர்கள் திருஅவையால் அனுப்பப்பட்டாலும், அதற்கு உண்மைமையுள்ளவர்களாக, சிறந்தவர்களாக செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
ஒவ்வொருவரும் தாழ்ச்சியுடனும், மற்றவர்களுக்கு செவிமடுப்பவர்களாகவும், இறைவனின் சோர்வடையாத சீடர்களாகவும் இயங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்