MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

ஸ்பெயின் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய திருத்தந்தை

இடம்பெயர்வு நெருக்கடி மற்றும் இடம்பெற்று வரும் மோதல்களைத் தீர்க்க உறவுப் பாலங்களைக் கட்ட வேண்டியதன் அவசியம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாத்தல் உள்ளிட்டவைகள் குறித்து திருத்தந்தையும், ஸ்பெயின் நாட்டு பிரதமரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூன் 11, இப்புதனன்று பிற்பகல், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஸ்பெயின் நாட்டுப் பிரதமர் திரு. Pedro Sánchez Pérez-Castejón அவர்களுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, ​​தனது திருத்தந்தை தலைமைப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் திருப்பலியில் பங்கேற்க மன்னர் பெலிப்பே மற்றும் அரசி லெடிசியா உரோமை வந்ததற்கு திருத்தந்தை நன்றி தெரிவித்துக் கொண்டதாக திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்வு நெருக்கடி, மற்றும் இடம்பெற்று வரும் மோதல்களைத் தீர்க்க உறவுப் பாலங்களைக் கட்ட வேண்டியதன்  அவசியம் மற்றும் மனித மாண்பைப் பாதுகாத்தல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் தேவைப்படும் முக்கியமான தலைப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் ஸ்பெயினின் செவில்லில் இடம்பெறவிருக்கும் வளர்ச்சிக்கான நிதியுதவி குறித்த நான்காவது அனைத்துலக மாநாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த பின்னர், பிரதமர் சான்செஸ் பெரெஸ்-காஸ்டெஜோன் அவர்கள் திருத்தந்தையை தன் நாட்டிற்கு வருகை தருமாறு மீண்டும் அழைத்தார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை உரைக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 ஜூன் 2025, 12:36