செயற்கை நுண்ணறிவு இளையோரின் வளர்ச்சிக்குத் தடையாக வேண்டாம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மனித அறிவின் அசாதாரணமான செயற்கை நுண்ணறிவு என்பது மனித மாண்பை மறந்துவிடக்கூடாது, மற்றும் இளையோரின், குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 14ஆம் லியோ.
செயற்கை நுண்ணறிவு குறித்து உரோம் நகரில் இடம்பெறும் இரண்டாவது கருத்தரங்கிற்கு அனுப்பியச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நல ஆதரவு, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செயற்கை நுண்ணறிவுத் தந்துவருகின்ற போதிலும், உலகின் உண்மை நிலைகளை ஆய்ந்து உணரும் பாதையில் சிரமங்களை முன்வைக்கிறது எனவும் கவலையை வெளியிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் ஒழுக்கரீதி கோட்பாடுகள், அவைகளை பொறுப்புடன் நிர்வகிப்பது குறித்தும் அச்செய்தியில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
வருங்காலத்தின் நம்பிக்கையாக இருக்கும் இளையோர் தங்கள் முதிர்ச்சி நோக்கியப் பாதையில் இந்த செயற்கை நுண்ணறிவு உதவ வேண்டுமேயொழிய ஓர் இடையூறாக இருக்கக்கூடாது என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.
நேர்மறை வளர்ச்சிக்கும், சரிநிகர் தன்மையை ஊக்குவிப்பதற்கும் பயன்படவேண்டிய செயற்கை நுண்ணறிவு, மற்றவர்களின் நஷ்டத்தில் சுயலாபத்திற்காக உழைத்தல், மோதலையும் அடக்குமுறைகளையும் ஊக்குவித்தல் போன்றவைகளில் உழைத்தால் அது தீமையாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்