MAP

குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலி திருப்பலியில் கலந்துகொண்ட குடும்பத்தார் குடும்பங்கள், குழந்தைகள், தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோருக்கான யூபிலி திருப்பலியில் கலந்துகொண்ட குடும்பத்தார்  (ANSA)

கிறிஸ்தவ சமூகம் தொலைநோக்கு பார்வையுடன் இருப்பது முக்கியம்

திருஅவையின் தாயன்பு கிறிஸ்தவ குடும்பங்கள் வழியாக கிறிஸ்துவின் மறைபொருளாம் உடலின் உயிருள்ள உறுப்பினர்களாக இருக்கும் உலக மக்களுக்கு வழங்கப்படுகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

இன்றைய உலகின் சவால்களைப் புரிந்துகொள்வதிலும், ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் நம்பிக்கைக்கான விருப்பத்தை வளர்ப்பதிலும், கிறிஸ்தவ சமூகம் தொலைநோக்குப் பார்வையுடன் இருப்பது முக்கியம் என்றும், பல்வேறு காரணங்களுக்காக, ஆன்மிக ரீதியாக நம்மிடமிருந்து மிகவும் தொலைவில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 2, திங்கள்கிழமை “இன்றைய மற்றும் எதிர்கால குடும்பங்களுடன் நற்செய்தியை அறிவித்தல், திருஅவையியல் மற்றும் மேய்ப்புப்பணி சவால்கள்” என்ற தலைப்பில் பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீடத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்த கருப்பொருளானது திருஅவையின் தாயன்பு கிறிஸ்தவ குடும்பங்கள் வழியாக கிறிஸ்துவின் மறைபொருளாம் உடலின் உயிருள்ள உறுப்பினர்களாக இருக்கும் உலக மக்களுக்கு வழங்கப்படுகின்றது என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், இம்மக்களே திருஅவையின் முதன்மையாகவும், இவர்களிடமே புதிய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், நற்செய்தியையும் பரப்புவதையும் இறைவன் ஒப்படைக்கிறார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எல்லையற்ற நிகழ்காலத்திற்கான ஆழ்ந்த தாகம் உள்ளது என்றும், பெற்றோர்கள் இறைத்தந்தையின் தந்தைத்துவம் பற்றி தங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய கடமையைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

“ஆண்டவரே, உம்மில் வாழ்வின் ஆதாரம் எங்களுக்கு இருப்பதால், உமது ஒளியில் நாங்கள் ஒளியைக் காண்போம்” என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நமது காலம் ஆன்மிகத்திற்கான வளர்ந்து வரும் தேடலால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்றும் கூறினார்.

திருஅவையை அதன் மேய்ப்பு மற்றும் மறைப்பணி பயணத்தில் கொண்டு செல்லுதல், கிறிஸ்துவை சந்திப்பதன் வழியாக, தீமை மற்றும் மரணத்தின் நீரிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தின் "மீனவராக" நாம் மாற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூன் 2025, 15:40