MAP

யூபிலி ஆண்டில் தூய ஆவியின் ஆற்றலினால் புதுப்பிக்கப்பட்டவர்களாக..

அமைதியான இதயம் மட்டுமே குடும்பத்திலும், சமூகத்திலும், பன்னாட்டு உறவுகளிலும் அமைதியைப் பரப்ப முடியும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூய ஆவியாரின் ஆற்றலினால் இந்த யூபிலி ஆண்டில் புதுப்பிக்கப்பட்டவர்களாக வாழ்வை மீண்டும் தொடங்குங்கள் என்றும், ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் எதிர்நோக்கை இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் கொண்டு செல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 8, ஞாயிறு பெந்தகோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியின் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

பெந்தகோஸ்து பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக, இத்திருப்பலியில் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் பங்கேற்ற அனைவரையும் அன்புடன் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள்,  கர்தினால்கள், ஆயர்கள், திருஅவைச் சங்கங்கள் மற்றும் இயக்கங்கள், புதிய சமூகங்களின் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இத்தாலியிலும் பிற நாடுகளிலும், கல்வி ஆண்டு முடிவுக்கு வருவதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இளைஞர்கள், அனைத்து மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள், குறிப்பாக வரும் நாட்களில் தங்கள் கல்வியாண்டின் நிறைவில் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் வாழ்த்த விரும்புவதாக எடுத்துரைத்தார்.

​​கன்னி மரியாவின் பரிந்துரையின் வழியாக, தூய ஆவியாரிடமிருந்து அமைதியின் பரிசை வேண்டிக்கொள்வோம் என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், முதலாவதாக, நம் இதயங்களில் அமைதியைப் பெற வேண்டுவோம் என்றும் கூறினார்.

அமைதியான இதயம் மட்டுமே குடும்பத்திலும், சமூகத்திலும், பன்னாட்டு உறவுகளிலும் அமைதியைப் பரப்ப முடியும் என்றும், போர் உள்ள இடங்களிலும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஆவியின் ஆற்றல் நல்லிணக்கத்திற்கான பாதைகளைத் திறக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும் கிறிஸ்துவின் இத்தகைய ஆற்றல், ஆட்சி செய்பவர்களுக்கு அறிவொளியூட்டட்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மனந்திரும்புதல் மற்றும் உரையாடலுக்கான அடையாளச் செயல்களைச் செய்ய அவர்களுக்கு துணிவை அளிக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 ஜூன் 2025, 13:01

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >