MAP

போலந்தின் ப்ளாக் மறைவாட்ட ஆலயம் போலந்தின் ப்ளாக் மறைவாட்ட ஆலயம்   (© diocesi di Płock)

950 -ஆம் ஆண்டு யூபிலியைச் சிறப்பிக்கும் ப்ளாக் மறைமாவட்டம்

ப்ளாக் மறைமாவட்டமானது 1075-ஆம் ஆண்டு திருத்தந்தை 7ஆம் கிரகரி அவர்களால் உருவாக்கப்பட்டது. வருகின்ற ஜூன் 7 சனிக்கிழமை 950 ஆவது ஆண்டினை சிறப்பிக்கின்ற வேளையில் திருத்தந்தையின் சார்பாக அந்நிகழ்வில் பங்கேற்க கர்தினால் Ladislav Nemet, S.V.D.அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

போலந்தின் பழமையான ப்ளாக் மறைமாவட்டத்தின் 950 -ஆம் ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்க கர்தினால் Ladislav Nemet, S.V.D. அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 2, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி பெல்கிராதோ பெருநகர உயர் மறைமாவட்ட கர்தினால் Ladislav Nemet, S.V.D. அவர்களை தனது பிரதிநிதியாக, சிறப்பு தூதராக, ப்ளாக் மறைமாவட்டத்தின் 950 ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்க நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ப்ளாக் மறைமாவட்டமானது 1075-ஆம் ஆண்டு திருத்தந்தை 7ஆம் கிரகரி அவர்களால் உருவாக்கப்பட்டது. வருகின்ற ஜூன் 7 சனிக்கிழமை 950 ஆவது ஆண்டினை சிறப்பிக்கின்ற வேளையில் திருத்தந்தையின் சார்பாக அந்நிகழ்வில் பங்கேற்க கர்தினால் Ladislav Nemet, S.V.D.அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.

ஆழமான நம்பிக்கையும், தூய்மைத்தனமும் நிறைந்த ஏராளமான மேய்ப்பர்களையும், இறைமக்களையும் உள்ளடக்கிய பழமையான மறைமாவட்டம் ப்ளாக் மறைமாவட்டம் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. குழந்தைகள் மற்றும் இளையோரின் பாதுகாவலரான புனித ஸ்தனிஸ்லாவ் கோஸ்ட்கா, இறை இரக்கத்தின் தூதுவரான அருள்சகோதரி ஃபவுஸ்தினா கோவாஸ்கா, இரண்டாம் உலகப்போரின்போது மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட அருளாளர்களான ஆயர்கள், அந்தோணியோ ஜூலியானோ மற்றும் வெட்ஸ்மான்ஸ்கி ஆகியோரைக் கொண்டது ப்ளாக் மறைமாவட்டம்.

1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் ப்ளாக் மறைமாவட்டத்திற்கு வருகை தந்து இறை இரக்கத்திற்குப் புகழ்பெற்ற பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 7, சனிக்கிழமை காலை 950-ஆம் ஆண்டு யூபிலி திருப்பலியினை கர்தினால் Ladislav Nemet, S.V.D. அவர்கள் தலைமையேற்று நிறைவேற்ற உள்ளார்.

மேலும் திருப்பீட மறைப்பணிக் கழகத்தின் உறுப்பினர்களாக ப்ளாக் மறைமாவட்ட குருமட அதிபர் அருள்பணி Marek JAROSZ மற்றும் போலந்தின் Żuromin பகுதியில் உள்ள தூய அந்தோணியோ பங்குத்தளத்தின் பங்குத்தந்தையான அருள்பணி Tomasz KADZIŃSKI அவர்களையும் நியமித்துள்ளார் திருத்தந்தை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜூன் 2025, 12:25