MAP

இயேசுவின் திரு இருதயம் இயேசுவின் திரு இருதயம்  

நம் காயங்களைக் குணப்படுத்தும் இயேசுவின் திரு இருதயம்

உலக மக்களை அளவற்ற விதமாக அன்பு செய்கின்ற இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவனது இயேசுவின் திருஉடல், திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு வரக்கூடிய வெள்ளிக் கிழமையில் கொண்டாடப்படுகிறது. திரு இதய ஆண்டவர் பக்திமுயற்சியானது 13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் பரவத்தொடங்கியது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவின் திருஇருதயத்திலிருந்து வழிந்தோடும் வாழ்வளிக்கும் நீரின் ஆறுகள், நாம் அனுபவிக்கும் காயங்களிலிருந்து நம்மைக் குணப்படுத்த நம்மை நோக்கிப் பாய்கின்றன என்றும், இதனால் நாம் ஒரு நீதியான, ஒன்றுபட்ட மற்றும் உடன் பிறந்த உணர்வு கொண்ட உலகத்தை நோக்கி நடக்க முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூன் 27, வெள்ளிக்கிழமை பிரான்சில் உள்ள Santuario di Paray-le-Monial என்னும் திருத்தலத்தில், புனித Margherita Maria Alacoque அவர்களுக்கு திருஇருதய ஆண்டவராம் இயேசு காட்சியளித்ததன் 350-ஆவது ஆண்டு சிறப்பிக்க இருப்பதை முன்னிட்டு ஜூன் 21, சனிக்கிழமை, Ajaccio மறைமாவட்ட ஆயரான கர்தினால் François Bustillo, O.F.M. அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் திரு இதயத்தின் மேல் அளவற்ற அன்பு கொண்டு அந்த அன்பினால் ஈர்க்கப்படுகிறார்கள் என்றும், முழுமையான நம்பிக்கையின் உதவியுடன், இறைவனுடனான ஐக்கியத்தை அடையும் வரை கிறிஸ்துவுடன் இணக்கமாக அவர்களால் வளர முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இயேசுவின் திருஇதய பக்தியின் பாதுகாவலரான Ajaccio மறைமாவட்டத்தில் உள்ள துறவற இல்லத்தில் புனித மார்கரேட் அவர்களுக்கு 1673 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1675 ஆம் ஆண்டு ஜூன் வரை திருஇருதய ஆண்டவர் காட்சியளித்து கூறிய வார்த்தைகள் இன்றும் கிறிஸ்தவ மக்களை நம்பிக்கையில் வளர்த்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

உலக மக்களை அளவற்ற விதமாக அன்பு செய்கின்ற இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவனது இயேசுவின் திருஉடல், திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு வரக்கூடிய வெள்ளிக் கிழமையில் கொண்டாடப்படுகிறது. திரு இதய ஆண்டவர் பக்திமுயற்சியானது 13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் பரவத்தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரே-லி-மோனியால் என்ற இடத்தில் வாழ்ந்த விசிட்டேஷன் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரி மார்கரெட் மேரி என்பவர் 1673-ஆம் ஆண்டு முதல் 1675- ஆம் ஆண்டு வரை கண்ட, பல தெய்வீகக் காட்சிகளில் ஆண்டவர் இயேசு, திரு இருதய விழாவை, திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு உள்ள வெள்ளிக்கிழமையில் சிறப்பிக்க வலியுறுத்தினார்.

திருத்தந்தை 13-ஆம் கிளமெண்ட் இதனை 1765-ஆம் ஆண்டில் அங்கீகரித்தார். 1865-ஆம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவினை கட்டாய விழாவாக திருஅவை முழுவதும் அறிமுகப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூன் 2025, 12:17