MAP

திருத்தூதர்களின் சான்று வாழ்வால் உரமிடப்பட்டு, உருவாக்கப்பட்ட திருஅவை

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், பேறுபெற்றொரின் பாதையில் அதாவது தூய ஆவியாரின் எளிமை, கனிவு, இரக்கம், கருணை, நீதிக்கான பசி மற்றும் தாகம், அமைதிக்காக உழைத்தல், எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் பேரின்பப் பாதையில் நடக்கிறார்கள். - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் மகிமையானது அவரது நண்பர்களிடத்தில் சுடர்விடுகின்றது என்றும், திருத்தூதர்கள் மற்றும் மறைசாட்சிகளின் இரத்தத்தால் உரமிடப்பட்டு அவர்களின் சான்று வாழ்வால் திருஅவை உருவாக்கப்பட்டது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 29, ஞாயிறு, திருஅவையின் திருத்தூதர்களான புனித பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளைசெப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உரோமைத் திருஅவையின் மிகப்பெரும் பெருவிழாவாகிய இன்று திருத்தூதர்களான புனித பேதுரு மற்றும் பவுல், திருஅவைக்காக இரத்தம் சிந்திய ஏனைய மறைசாட்சிகளின் தியாக வாழ்வை நினைவு கூர்கின்றோம் என்றும், அவர்கள் சிந்திய இரத்தத்தால் உரமிடப்பட்டு சான்று வாழ்வால் திருஅவை உருவாக்கப்பட்டது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கிறிஸ்துவிற்காகவும் நற்செய்திக்காகவும் தங்களது வாழ்வை இழக்கும் மக்கள் நமது காலத்திலும் உள்ளனர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இவ்வாறு சிந்தப்பட்ட அவர்களது இரத்தமானது கிறிஸ்தவக் கோட்பாடு மற்றும் கிறிஸ்தவ தலத்திருஅவைகளுக்கிடையே உள்ள கண்ணுக்குத் தெரியாத ஆழமான ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

திருத்தந்தையின் பணியானது ஒற்றுமைக்கான பணி என்றும், அப்பணி உரோமைத் திருஅவையின் புனிதர்களான பேதுரு மற்றும் பவுலின் இரத்தத்தால் அனைத்து திருஅவைகளுக்கும் இடையில் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த விரும்புவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பாறை என்னும் கிறிஸ்துவின் பெயரைத் தனது பெயராகக் கொண்ட பேதுரு, “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” (மத் 21:42) என்பது போல தூய பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் வளாகம், தூய பவுல் பெருங்கோவில் போன்றவை  தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு வந்ததை எடுத்துரைக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், பேறுபெற்றோரின் பாதையில் அதாவது, தூய ஆவியாரின் எளிமை, கனிவு, இரக்கம், கருணை, நீதிக்கான பசி மற்றும் தாகம், அமைதிக்காக உழைத்தல், எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்ளும் பேரின்பப் பாதையில் நடக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுளின் மகிமையானது அவரது நண்பர்களிடத்தில் சுடர்விடுகின்றது என்றும், மனமாற்றத்தின் வழியாக மனமாற்றம் பெறும் பாதையில் அவர்களை வடிவமைக்கின்றது என்றும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், புதிய ஏற்பாடானது நாம் வணங்கும் பெரிய திருத்தூதர்களின் பிழைகள், முரண்பாடுகள் மற்றும் பாவங்களை மறைக்காது அவர்களின் மாண்பு மன்னிப்பால் வடிவமைக்கப்பட்டதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.

உயிர்த்தெழுந்த இயேசு அத்திருத்தூதர்களின் வாழ்க்கைப் பாதையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தோன்றி, அவர்களைத் தனது பாதையில் மீண்டும் கொண்டு வரச் செய்தார் என்றும், இயேசு ஒருபோதும் ஒரு முறை மட்டுமே அழைப்பதில்லை, மாறாக பலமுறை நம்மை அழைக்கின்றார் எதிர்நோக்குடம் வாழ வலியுறுத்துகின்றார் என்பதை இந்த எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு நமக்கு நினைவூட்டுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருஅவையிலும், தலத்திருஅவைகள் மற்றும் சகோதர சகோதரிகளிடத்திலும் மன்னிப்பு, ஒன்றிப்பு, இணக்கமுள்ள நம்பிக்கை போன்றவை வளர்க்கப்படுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசு நம்மை நம்புவது போல, நாமும் ஒருவர் மற்றவரை அவரது பெயரால்  நம்பி வாழ முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்தப் பிளவுபட்ட உலகில் திருஅவையானது ஓர் இல்லமாகவும், ஒன்றிப்பிற்கான பள்ளியாகவும் இருக்க, திருத்தூதர்கள் பேதுருவும் பவுலும், கன்னி மரியாவும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக என்று கூறி கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரைக்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஜூன் 2025, 13:05

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >