MAP

ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலக உறுப்பினர்களுடன் திருத்தந்தை. ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலக உறுப்பினர்களுடன் திருத்தந்தை.  (ANSA)

ஒருங்கியக்கம் என்பது ஒரு மனப்பான்மை!

ஒருங்கியக்கம் என்பது ஒரு பாணி மற்றும் ஒரு மனப்பான்மை, இவை நாம் திருஅவையாக இருக்க உதவுவதோடு, பங்கேற்பு மற்றும் ஒன்றிப்பின் உண்மையான அனுபவங்களை பெற ஊக்குவிக்கிறது - திருத்தந்தை

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஒருங்கியக்கம் என்பது ஒரு பாணி மற்றும் ஒரு மனப்பான்மை ,இவை நாம் திருஅவையாக இருக்க உதவுவதோடு ,பங்கேற்பு மற்றும் ஒன்றிப்பின் உண்மையான அனுபவங்களை பெற ஊக்குவிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 26, வியாழக்கிழமை, ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலக உறுப்பினர்களை  திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு  தெரிவித்தார் திருத்தந்தை.

முன்னதாக அவர்கள் அனைவரையும் வரவேற்ற திருத்தந்தை தான் மையமாகக் கருதும் ஒருங்கியக்கம் பற்றிய தனது எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலமுறை திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களை குறிப்பிட்டு,  ஆயர் மாமன்றத்திற்கு  ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளார் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும் ஒருங்கியக்கம் என்பது ஒரு பாணி மற்றும் ஒரு மனப்பான்மை என்றும் ,இவை நாம் திருஅவையாக இருக்க உதவுவதோடு, பங்கேற்பு மற்றும் ஒன்றிப்பின் உண்மையான அனுபவங்களை பெற ஊக்குவிக்கிறது என்றும் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்   விட்டுச் சென்ற பாரம்பரியத்தையும் திருத்தந்தை பகிர்ந்து கொண்டார்.

தனது பணிக்காலத்தின் போது மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கியக்கம் பற்றிய இச்சிந்தனைகளை மக்களவையில் குறிப்பாக குடும்பங்களைப் பற்றிய கூட்டங்களில் முன்னெடுத்துச் சென்றதாவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆயர் மாமன்றம் இயற்கையாகவே அதன் நிறுவன தனித்துவத்தைப்  பாதுகாக்கும் அதேவேளை, இக்காலத்தின் பலன்களாலும் செழிப்படைந்துள்ளது என்றும், இந்த பலன்களைச் சேகரித்து எதிர்காலத் தோழமைக்கு வழிகாட்டும் சிந்தனையில் ஈடுபட,  நியமிக்கப்பட்ட குழுவாக ஆயர் மாமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இறுதியாக, ஆயர் மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, அவர்களின் பணிகள் பயனளிக்க தான் இறைவேண்டல் செய்வதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜூன் 2025, 13:48