MAP

அயர்லாந்து கால்பந்து விளையாட்டு அமைப்பான (hibernia Gaelic Athletic Association) GAA -யின் உறுப்பினர்கள்  அயர்லாந்து கால்பந்து விளையாட்டு அமைப்பான (hibernia Gaelic Athletic Association) GAA -யின் உறுப்பினர்கள்  

திருத்தந்தைக்கு யூபிலி ஆண்டு விளையாட்டு உடை அன்பளிப்பு

உரோமிலுள்ள ஹைபர்னியா கேலிக் தடகள சங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மூன்று அயர்லாந்து விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத்துறையினருக்கான யூபிலி நிகழ்வின்போது நடைபெற்ற பொதுமறைக்கல்வி உரைக்கூட்டத்தின்போது திருத்தந்தைக்கு ஒரு சிறப்பு யூபிலி விளையாட்டு உடையை (ஜெர்சியை) வழங்கினார்கள்.

சுஜிதா சுடர்விழி -வத்திக்கான்

விளையாட்டுத் துறையினருக்கான யூபிலி பொதுமறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் அயர்லாந்தைக் குறிப்பிட்டது வியப்பை உண்டாக்கியது என்றும், தங்கள் நாட்டுக்கொடியை அசைத்து திருத்தந்தையை வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றும் கூறினார் விளையாட்டு வீராங்கனை கேத்தரின்.

ஜூன் 14, சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற விளையாட்டுத்துறையினருக்கான யூபிலி மறைக்கல்வி உரையின் நிறைவில் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களைச் சந்தித்து யூபிலி ஆண்டு ஆடை ஒன்றினை பரிசளித்த நிகழ்வு பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு எடுத்துரைத்தார் அயர்லாந்து கால்பந்து விளையாட்டு அமைப்பான (hibernia Gaelic Athletic Association) GAA -யின் உறுப்பினர் கேத்தரின்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர், மக்கள் ஒன்றுகூடி  விளையாட ஒரு  சங்கத்தை உருவாக்கியதாகவும் அதில்  அயர்லாந்து குடியரசைச் சேர்ந்த நியாம் ரியான், கேத்தரின் ஹாலினன் மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த கேத்தி மொல்லாய் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து GAA கூட்டமைப்பில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

விளையாட்டுத்துறையினருக்கான யூபிலியானது சனிக்கிழமை மறைக்கல்வி உரையுடன் தொடங்கியது எனவும், அதில் திருத்தந்தை அயர்லாந்தை குறிப்பிட்டது குறித்து மகிழ்ச்சியடைந்த கேத்தரின், திருத்தந்தை தன் நாட்டை பெயர் சொல்லி அழைத்த தருணம், நம்பமுடியாததாகவும், மறக்க முடியாததாகவும் இருந்தது என்றும்  கூறினார்.

பெருமையுடன் தங்கள் நாட்டுக்கொடியை அசைத்து, திருத்தந்தை பதினான்காம்  லியோவுடன் ஒரு சிறப்பு தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடிந்ததை நினைவு கூர்ந்த கேத்தி, கால்பந்து விளையாட்டு உடையைத் (ஜெர்சியை) திருத்தந்தைக்கு அன்பளிப்பாக வழங்க முடிந்ததையும் பகிர்ந்துகொண்டார்.

கேலிக் மொழியில் எழுதப்பட்ட யூபிலி சின்னம் உடையின் கைப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ளதாகவும், இதனால் திருத்தந்தையை GAA இன் கௌரவ உறுப்பினராகக் கருதுவதாகவும்  நகைச்சுவையாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் கேத்தரின்

GAA இன் உறுப்பினர்களாக உரோமில் வாழ்கின்ற இந்த மூன்று விளையாட்டு வீரர்களும், நம்பிக்கைக்கும் விளையாட்டுக்கும் இடையே ஓர் இறுக்கமான பிணைப்பு உள்ளது எனவும், அது GAA-இன் உறுப்பினர்கள், நம்பிக்கையுடன் விளையாட்டுகளை விளையாடி வளர்ந்தது போல் உள்ளது என்றும் எடுத்துரைத்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜூன் 2025, 14:47