துறவற அருள்சகோதரிகளுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோவின் உரை
சுஜிதா சுடர்விழி - வத்திக்கான்
பலவீனர்களான குழந்தைகள், ஏழைப் பெண்கள், சிறுவர்கள், அனாதைகள், புலம்பெயர்ந்தோர், முதியவர் மற்றும் நோயாளிகளுக்கு, தங்கள் பணிகள் மூலம் அவர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை தெளிவாகத் எடுத்துக்காட்டி பணியாற்றிவரும் அருள்சகோதரிகளுக்குத் தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை 14ஆம் லியோ.
தூய பேசில் அருள் சகோதரிகள், Daughters of Divine Charity; அம்புரோவின் தூய அகஸ்டினியன் அருள் சகோதரிகள் மற்றும் பிரான்சிஸ்குவின் தூய இருதய அருள் சகோதரிகளை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, அவர்கள் வெவ்வேறு காலங்களில் தனித்துவமான சூழ்நிலைகளில் நிறுவப்பட்ட துறவறச் சபைகளைச் சேர்ந்தவர்கள் எனினும், அவர்களின் வரலாறுகள் ஒரு பொதுவான நூலைப் பகிர்ந்து கொள்கின்றன, அது அகஸ்டின், பேசில், பிரான்சிஸ் போன்றவர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒரு சிறந்த வரலாற்று சாட்சிகளாகவும், அவர்களின் சபையின் நிறுவனர்கள் அப்புனிதர்களின் துறவு வாழ்வு, துணிச்சல் மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மைகளை மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கான புதிய வழிகளை வளர்க்க தூண்டின எனவும் கூறினார்.
மேலும் தன் உரையில், தூய அகஸ்டினார் கிறிஸ்தவ வாழ்க்கையில் கடவுளை முதன்மையாகக் கொண்டு பேசும் போது, "உங்களுக்கு எல்லாமுமாக இருப்பவர் கடவுள்" எனவே நீங்கள் பசியாக இருந்தால், அவர் உங்களுக்கு அப்பம்; நீங்கள் தாகமாக இருந்தால், அவர் உங்களுக்கு தண்ணீர்; நீங்கள் இருளில் இருந்தால், அவர் உங்களுக்கு ஒளி, அது ஒருபோதும் மங்காது; நீங்கள் நிர்வாணமாக இருந்தால், அவர் உங்களுக்கு நித்திய ஆடை என்றும் உறுதிப்படுத்துகிறார் (Ioannis Evangelium, 13, 5) என்பதையும் சுட்டிக்காட்டினார்..
மேலும், கிறிஸ்துவில் வேரூன்றிய, நமக்கு முன் சென்றவர்கள், நம்மைப் போன்ற ஆண்கள் மற்றும் பெண்கள், அவர்கள் நம்மைப் போல் வரங்களையும், வரம்புகளையும் கொண்டவர்கள், அவர்கள் ஒருபோதும் சாதிக்க முடியாது என்று நினைத்த காரியங்களை செய்ய ஆன்மிகம் வழிவகுத்தது எனவும், கிறிஸ்தவத்தில் வேரூன்றிய இவர்கள், பல நூற்றாண்டுகளாக பல கண்டங்களில் நன்மையின் விதைகளை விதைக்க அவர்களுக்கு அது உதவியது எனவும், இன்று அது உலகமெங்கும் சென்றடைந்துள்ளது என்பதை இங்கிருக்கும் உங்கள் ஒவ்வொருவர் மூலம் அறியமுடிகிறது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை 14ஆம் லியோ.
உங்களில் சிலர் உங்கள் துறவற சபையின் பொதுப்பேரவைக்காகவும், மற்றவர்கள் உங்கள் யூபிலி திருப்பயணத்திற்காகவும் இங்கே கூடியுள்ளீர்கள். எதுவாயினும், உங்கள் எதிர்காலத்தை, உங்கள் சகோதரிகளின் மற்றும் திருஅவையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான காலத்தில் இருக்கிறீகள், எனவே தூய பவுல் வெளிப்படுத்திய அழகான நம்பிக்கையை அனைவருக்கும் மீண்டும் வலியுறுத்த ஆவல் கொள்கிறேன் எனக்கூறி அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்