MAP

முன்னாள் திருத்தந்தையுடன் WCC உயரதிகாரி முன்னாள் திருத்தந்தையுடன் WCC உயரதிகாரி 

இன்றைய உலகிற்கு நீதி, அமைதி, ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பு தேவை

போர்களும் மோதல்களும், வன்முறைகளும், காலநிலை மாற்றங்களும், பொருளாதார மற்றும் பாலினப்பாகுபாட்டு அநீதிகளும் இடம்பெற்றுவரும் இன்றைய சூழலில் இவ்வுலகிற்கு நீதி, அமைதி, ஒப்புரவு, மற்றும் ஒன்றிப்பு தேவைப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் தலைமைத்துவப் பணி பொறுப்பேற்புக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ள WCC  உலக கிறிஸ்தவ சபைகளின் அமைப்பு, இது கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான நட்புணர்வு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பு என புதிய திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உலக கிறிஸ்தவ சபைகளின் அமைப்பின் நெறியாளர், ஆயர்  Heinrich Bedford-Strohm, அதன் பொதுச் செயலர், கிறிஸ்தவக்குரு Jerry Pillay ஆகியோர் புதிய திருத்தந்தைக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இன்றைய உலகிற்கு நீதி, அமைதி, ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பு தேவைப்படுவதாக தங்கள் கடிதத்தில் மேலும் அறிவித்துள்ளனர்.

புதிய திருத்தந்தை தன் உரையில் மறைப்பணி திருஅவை, ஒன்றித்து நடைபோடுதல், அமைதி, பாலங்களைக் கட்டியெழுப்புதல் போன்றவைகளைப் பற்றி பேசியதைக் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ சபைகளின் இக்கடிதம், கிறிஸ்தவ சபைகளுடன் ஒன்றிப்பிற்காக இதுவரை கத்தோலிக்க திருஅவை எடுத்துவந்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளது.

போர்களும், மோதல்களும், வன்முறைகளும், காலநிலை மாற்றங்களும், பொருளாதார மற்றும் பாலினப்பாகுபாட்டு அநீதிகளும் இடம்பெற்றுவரும் இன்றைய சூழலில் இவ்வுலகிற்கு நீதி, அமைதி, ஒப்புரவு, மற்றும் ஒன்றிப்பு தேவைப்படுகின்றது என்ற WCC தலைவர்கள், இதற்கான பயணத்தில் ஒன்றிணைந்து நடைபோட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஒன்றிப்பை நோக்கிய பாதையில் இணைந்து நடைபோட கிறிஸ்தவ சபைகளின் அவை எப்போதும் தயாராக இருக்கிறது என புதிய திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள தங்கள் கடிதத்தில் உறுதி கூறியுள்ளனர் WCC அவையின் தலைவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மே 2025, 15:02