சீரோ மலங்கரா தலத்திருஅவைக்கு புதிய ஆயரை நியமித்துள்ளார் திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சீரோ மலங்கரா தலத்திருஅவையின் மாவேலிக்கரா மறைமாவட்ட புதிய ஆயராக மேத்யூஸ் போலிகிராப்ஸ் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 30, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இத்தகவல்களின்படி சீரோ மலங்கரா தலத்திருஅவையின் முன்னாள் ஆயராக இருந்த ஜோசுவா இக்னாதியோஸ் அவர்களின் பணிஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், திருவனந்தபுரம் துணை ஆயர் மேத்யூஸ் போலிகிராப்ஸ் அவர்களை அத்தலத்திருஅவையின் ஆயராக நியமித்துள்ளார்.
ஆயர் மேத்யூஸ் போலிகிராப்ஸ் அவர்கள், 1955-ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று மணக்காரகாவில் பிறந்தவர்.
திருவனந்தபுரத்தில் உள்ள புனித அலாய்சியஸ் இளங்குருமடத்திலும், வடவத்தூரில் உள்ள திருத்தூதர் புனித தாமஸ் குருமடத்திலும் கல்வி பயின்று, 1982ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று குருத்துவ அருள்பொழிவுபெற்றவர்.
2010-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம், இவானியோஸ் கல்லூரியின் தலைவர் மற்றும் பேராசிரியர், பல்வேறு பங்குத்தளங்களில் பங்குப்பணியாளர், திருவனந்தபுரம் தலத்திருஅவையின் ஆயர் பொதுப்பதில் குருவாகப் பலபணிகளில் பொறுப்புடன் ஆற்றியவர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கனாட்டா மறைமாவட்ட பட்டம் சார் ஆயராக 2022 ஆம் ஆண்டு மே 7 அன்று நியமிக்கப்பட்ட ஆயர் அவர்கள், மே 15 அன்று ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்