திருஅவையை வழிநடத்தும் உண்மை ஆயனாம் இயேசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படும் இந்த பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இயேசு தனது ஆடுகளை அறிந்து அன்பு செய்கின்றார், அவைகளுக்காகத் தனது உயிரைக் கொடுக்கின்றார் உண்மையான ஆயனாகத் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 11, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் மேல் மாடத்தில் நின்று தனது முதல் பாஸ்கா கால மூவேளை செப உரையினை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இலட்சக் கணக்கான இறைமக்களுக்கு வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இறையழைத்தலுக்கான 62-ஆவது உலக நாளினை சிறப்பிக்கும் இந்நாளில், இன்னிசைக் கலைஞர்கள் தங்களது யூபிலியினை சிறப்பிக்கின்றனர் என்று நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், திருஅவையை தனது தூய ஆவியின் வல்லமையினால் வழிநடத்தி வரும் நல்லாயனாம் இயேசுவின் ஞாயிறை சிறப்பிக்கும் அனைவருக்கும், குறிப்பாக வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்தார்.
குருத்துவம் மற்றும் துறவற வாழ்விற்கான இறையழைத்தல் பெருக அனைத்து மக்களுடனும் இணைந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருஅவை பணியாற்ற இறையழைத்தல் மிக முக்கியமானது தேவையானது என்றும், இளையோர் தங்களது தலத்திருஅவைகளில் வரவேற்றலையும், இறையழைத்தலுக்கான பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுத்தலையும் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்