திருத்தந்தை 14-ஆம் லியோவின் வரும் வார திருப்பலி நிகழ்வுகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மே 8, வியாழனன்று திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் வரும் வார திருப்பலி நிகழ்வுகள் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மே 9, வெள்ளிக்கிழமை காலை உரோம் உள்ளூர் நேரம் காலை 11 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சிஸ்டைன் சிற்றாலயத்தில் கர்தினால்களுக்கான திருப்பலியினை நிறைவேற்றுவார் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ. இந்நிகழ்வானது நேரடியாக அனைத்து சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பப்படும்.
மே 11, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் இருந்து தனது முதல் பாஸ்கா கால மூவேளை செப உரையினை இறைமக்களுக்கு வழங்க இருக்கின்றார்.
மே 12, திங்கள் கிழமை காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் ஊடகப் பணியாளர்களை சந்தித்து உரையாற்ற உள்ளார் புதிய திருத்தந்தை 14 -ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்