டென்னிஸ் விளையாட்டு வீரரைச் சந்தித்தார் திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
2025-ஆம் ஆண்டு இத்தாலிய டென்னிஸ் போட்டிகள் உரோமில் நடைபெற்று வரும் நிலையில், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், பிரபல டென்னிஸ் வீரரான Jannik Sinner என்பவரை திருப்பீடத்தில் சந்தித்தார்.
மே 14, புதன்கிழமையன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள ஓர் அறையில் 23 வயது மதிக்கத்தக்க பிரபல டென்னிஸ் வீரரான Jannik Sinner மற்றும் அவரது குடும்பத்தாரைச் சந்தித்தார். இத்தாலிய டென்னிஸ் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் Alberto Binaghi உடன் இருந்தார்.
டென்னிஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்த விளையாட்டு வீரர் டென்னிஸ் விளையாட்டிற்கான மட்டை மற்றும் பந்தினை திருத்தந்தைக்கு அளித்து நாம் விளையாடலாம என்று கேட்க அதற்குத் திருத்தந்தை இங்கு விளையாடினால் நாம் எதையாவது உடைக்க நேரிடும் எனவே வேண்டாம் என்று நகைச்சுவையாகப் பதில் கூறினார் திருத்தந்தை.
2025 ஆம் ஆண்டு இத்தாலியன் ஓபன், அதிகாரப்பூர்வமாக பன்னாட்டு BNL d’Italia என்று அழைக்கப்படுகிறது, தற்போது உரோமில் உள்ள ஃபோரோ இத்தாலிகோ (Foro Italico complex) வளாகத்தில் நடந்து வருகிறது.
ATP எனப்படும் இத்தாலிய சுற்றுலா நிறுவனம் மற்றும் WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் இயக்கம் இணைந்து நடத்தும் 1000 சுற்றுகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மதிப்புமிக்க டென்னிஸ் போட்டியானது மே 7 முதல்மே 18 வரை நடைபெற இருக்கின்றது.
சிறந்த பன்னாட்டு மற்றும் இத்தாலிய விளையாட்டு வீரர்கள் இந்த நிகழ்வில் போட்டியிடுகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்