MAP

மெக்சிகோ இளையோருக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

உலகளாவிய வாழ்க்கை அறக்கட்டளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்விற்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 -ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பதிவுசெய்த காணொளியானது ஒளிபரப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மெக்சிகோவின் Zocalo என்னுமிடத்தில் நடைபெற்ற இளையோர்க்கான கூட்டத்தில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னதாகவே இவ்விளையோர்க் கூட்டத்திற்காகப் பதிவுசெய்த காணொளிக் காட்சியானது ஒளிபரப்பப்பட்டது.

உலகை மாற்றுவதற்கு குரல் கொடுப்பவர்களாக சத்தம் எழுப்புபவர்களாக இளையோர் இருக்க வேண்டும் என்றும், உலக மாற்றத்திற்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்றும் அக்காணொளியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் அமெரிக்க நாட்டின் மெக்சிகோ நகரத்தின் சோகலோவில், வாழ்க்கையை கொண்டாடவும், எல்லாவற்றிற்கும் மேலாக, உலகெங்கிலும் உள்ள மக்களின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு தங்களை அர்ப்பணிக்கவும் மே 4 ஞாயிறன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடினர்.

இந்த நிகழ்வில், (Vitae Global Foundation) உலகளாவிய வாழ்க்கை அறக்கட்டளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வானது நடைபெற்றது, இந்நிகழ்விற்காக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 -ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பதிவுசெய்த காணொளியானது ஒளிபரப்பட்டது.

திருத்தந்தையின் காணொளிச் செய்தி

அன்பான இளையோர்களே, நற்செய்திகளை ஒருவர் மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் கூடியிருக்கும் நீங்கள், அமைதியாக இருக்க அல்ல, மாறாக சத்தம் எழுப்பவும், மகிழ்வுடன் விடயங்களை நகர்த்திச்செல்லவும் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்றும் கூறியுள்ளார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ்.      

இவ்வுலகில் இருக்கும் அழகான பல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் அதனை இன்னும் அதிகப்படுத்தவும், இளையோர் தங்களது செயல்களைச் செய்யவேண்டும் என்றும், கெடுதலான விடயங்களை மாற்றுவதற்கும், அதனை சரிசெய்வதற்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இளையோர் தங்களது ஆடையின் மேல் அணிந்திருக்கும் வெள்ளை நிற துணியானது பாவிகளாகிய நம் அனைவரது எதிர்நோக்கின் அடையாளம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், எனக்காக செபிக்க மறவாதீர்கள், குவாதலுப்பே அன்னை மரியா உங்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பார் என்று கூறி தனது காணொளியினை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மே 2025, 16:14