MAP

மே மாத செபக்கருத்து - பணி நிலைமைகளுக்காக

திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்கள், பணியாளர்கள் குறித்து எடுத்துரைத்த கருத்துக்களை ஒருங்கிணைத்து காணொளிச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு என்ற பணிக்குழு.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2025- ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மே மாத செபக்கருத்தாக மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணி நிலைமைகளுக்காக செபிக்க வலியுறுத்தி இருந்த நிலையில் முன்னாள் திருத்தந்தையர்களான திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்,  திருத்தந்தை தூய இரண்டாம் ஜான் பால் அவர்கள் (தொழிலாளர்கள் )பணியாளர்கள் குறித்து எடுத்துரைத்த கருத்துக்களை ஒருங்கிணைத்து காணொளிச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு என்ற பணிக்குழு.

பணியின் வழியாக ஒவ்வொருவரும் நிறைவு காணவும், குடும்பங்கள் தங்களது மாண்பினைத் தக்கவைத்துக் கொள்ள சமுகம் மனித மயமாக்கப்படவும் மன்றாடுவோம் என்று 2025 - ஆம் ஆண்டு மே மாதத்திற்கான செபக்கருத்தை வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு என்ற பணிக்குழு.

மேலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள திருத்தந்தையின் பணியினை இறைவனிடம் ஒப்படைத்து, மனிதகுலத்தின் சவால்களையும் திருஅவையின் பணியையும் கடவுளிடம் ஒப்படைப்பதற்கான தனது தூதரகப் பணியைத் தொடர்கிறது என்று குறிப்பிட்டு காணொளியினை  வெளியிட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் (2022 – பொது மறைக்கல்வி உரை)

"நற்செய்தியாளர்கள் மத்தேயுவும் மாற்கும் யோசேப்பை தச்சர் என்று அடையாளப்படுத்துகின்றார்கள், இயேசு மிகவும் கடினமான தனது தந்தையின்  தொழிலைச் செய்தார். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அதிக அளவு வருவாயை அத்தொழில் ஈட்டவில்லை. இயேசு மற்றும் யோசேப்பின் இத்தகைய உண்மை நிலையானது உலகளவில் இருக்கும் பணியாளர்கள் அனைவரையும் நினைவுகூர வைக்கின்றது.

பணி நமது மாண்பை அருள்பொழிவு செய்கின்றது, வீட்டிற்கு உணவைக் கொண்டு வருவது நமக்கான மாண்பல்ல, மாறாக அந்த உணவை சம்பாதிப்பதே நமக்கான (பணியாளர்களுக்கான) மாண்பு".

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (2006 – புனித யோசேப்பு திருவிழா)

"பணி என்பது மனிதனின் நிறைவிற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அது எப்போதும் மனித மாண்பிற்கு முழு மரியாதையுடனும், பொது நன்மைக்கு பணியாற்றும் வகையிலும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், மக்கள் தங்களை பணியால் அடிமைப்படுத்தப்படவோ ஆராதிக்கப்படவோ அனுமதிக்கக்கூடாது, மாறாக, வாழ்க்கையின் இறுதி மற்றும் உறுதியான அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதாக இருக்கவேண்டும்".

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் (2000 யூபிலி ஆண்டு

"யூபிலி ஆண்டு பணியின் அர்த்தத்தையும் மதிப்பையும் மீண்டும் கண்டுபிடிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. இது மதிப்புகளின் சரியான படிநிலையை மீண்டும் நிறுவுவதன் வழியாக, உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் மாண்பிற்கும், அவர்களின் சுதந்திரம், பொறுப்பு மற்றும் பங்கேற்பிற்கும் முன்னுரிமை அளிப்பதன் வழியாக உலகில் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான அழைப்பாகும்".

"வேலையின்மை, போதிய ஊதியமின்மை மற்றும் பொருள் வளங்கள் இல்லாது பாதிக்கப்படுபவர்களை மறந்துவிடாமல் அநீதியின் சூழ்நிலைகளை சரிசெய்ய நாம் அழைக்கப்படுகின்றோம்".

பணியின் வழியாக ஒவ்வொருவரும் நிறைவு காணவும், குடும்பங்கள் தங்களது மாண்பினைத் தக்கவைத்துக் கொள்ள சமுகம் மனித மயமாக்கப்படவும் மன்றாடுவோம் என்று 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கான செபக்கருத்தை வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு என்ற பணிக்குழு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மே 2025, 17:12