அமெரிக்க அரசுத் துணைத்தலைவருடன் திருத்தந்தை 14-ஆம் லியோ
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே 19, திங்கள்கிழமை காலை வத்திக்கானில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசுத் துணைத்தலைவர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களைச் சந்தித்தார்.
திருத்தந்தையுடனான சந்திப்புக்குப் பின் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களைச் சந்தித்தார் டேவிட் வான்ஸ்.
இச்சந்திப்பின்போது திருப்பீடம் மற்றும் அரசு இரண்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பு, இருதரப்பு உறவுகள் போன்றவை நலமாக இருப்பதாக எடுத்துரைக்கப்பட்டது.
மோதல் பகுதிகளில் மனிதாபிமான சட்டம் மற்றும் பன்னாட்டு சட்டத்தை மதிக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அதன் வழியாக தீர்வு காணவும் அழைப்பு விடுத்து, சில தற்போதைய பன்னாடுப் பிரச்சினைகள் குறித்தக் கருத்துப் பரிமாற்றமும் இச்சந்திப்பின்போது நடைபெற்றது.
அரசு துணைத்தலைவர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் அவர்கள், கடந்த மார்ச் 20, உயிர்ப்பு ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார், ஏப்ரல் 26, சனிக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கத் திருப்பலியிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்