MAP

திருத்தந்தையுடன் ஆஸ்திரேலிய பிரதமர் திருத்தந்தையுடன் ஆஸ்திரேலிய பிரதமர்  (@VATICAN MEDIA)

மூன்று நாடுகளின் தலைவர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஆஸ்திரேலிய கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் கல்விப் பணிகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சி, மத சுதந்திரம் போன்றவை குறித்தும் அரசுக்கும் திருஅவைக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மே 19, திங்களன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் கொலம்பியா நாட்டின் அரசுத்தலைவர், ஜியார்ஜியா குடியரசின் அரசுத்தலைவர் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு துணை அதிபர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்ததுடன் ஆஸ்திரேலிய நாட்டு பிரதமரையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசே அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடியபின் நாடுகளுடனான திருப்பீடத்தின் உறவுகளுக்கான செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

ஆஸ்திரேலிய சமூகத்திற்கு கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் பணிகள், குறிப்பாக கல்விப் பணிகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சி, மத சுதந்திரம் போன்றவை குறித்தும் இரு தரப்பினரிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இதே நாளில் திருப்பீடத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களைச் சந்தித்து உரையாடிய கொலம்பிய அரசுத்தலைவர் Gustavo Francisco Petro Urrego அவர்கள், அதன் தொடர்ச்சியாக பேராயர் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஜியார்ஜியா குடியரசின் அரசுத்தலைவர் Mikheil Kavelashvili அவர்களும் திங்களன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களை தனியாகச் சந்தித்து உரையாடினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மே 2025, 15:06