மிக நீண்ட பயணத்தின் இலக்கு வெற்றிக்கோப்பை
மெரினா ராஜ் – வத்திக்கான்
வெற்றிக் கோப்பையைப் பெறுவது என்பது மிக நீண்ட பயணத்தின் முடிவில் அடையப்படும் ஓர் இலக்கு என்றும், அது சுரண்டப்பட்ட ஒன்றோ அல்லது தனி ஒரு விளையாட்டு வீரரின் அசாதாரணமான திறனோ அல்ல மாறாக ஒன்றிணைந்த அணியின் வெற்றி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 27, செவ்வாயன்று திருப்பீடத்தில் நாப்போலி கால்பந்து விளையாட்டுச் சங்கத்தாரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், விளையாட்டு ஒரு வணிகமாக மாறும்போது, அதை கல்வி சார்ந்ததாக மாற்றும் மதிப்புகளை நாம் இழக்க நேரிடுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
வணிகமாக மாறும் விளையாட்டு கல்வியற்றதாக மாறுகின்றது இச்சூழலில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வெற்றி பெற்ற வீரர்கள் என்று சொல்வதை விட ஒன்றிணைந்து விளையாடி வெற்றியைப் பெற்ற அணி என்று கூறுவதே சிறந்தது என்று தெரிவித்து விளையாட்டு அணி வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளது அவர்களுக்கு வாழ்த்துக்கள், என்று கூறினார்.
பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இளம் தலைமுறையினருடன் பழகும்போது விளையாட்டு அனுபவத்தின் நல்லொழுக்க நெறியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஏனெனில் இளைஞர்களின் மனித வளர்ச்சி ஆபத்தில் உள்ளது என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்