கான்கிளேவ் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமானது
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே 8, வியாழன் காலை 8 மணியளவில் பவுலின் சிற்றாலயத்தில் ஒன்று கூடிய கர்தினால்கள் காலைப்புகழ் மற்றும் திருப்பலியில் பங்கேற்றனர்.
உரோம் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில் சிஸ்டைன் சிற்றாலயத்திற்குள் சென்று இரண்டாவது வாக்குப்பதிவினை ஆரம்பித்தனர்.
காலையில் நடைபெறும் இரண்டு வாக்குப்பதிவுகளின் நிறைவில் புதிய திருத்தந்தை தேர்தெடுக்கப்படவில்லை எனில் மதிய உணவிற்குப் பின் மாலை 3.45 மணியளவில் மீண்டும் கர்தினால்கள் சிஸ்டைன் சிற்றாலயத்தில் ஒன்று கூடுவர். இரண்டு வாக்குப்பதிவுகள் நடைபெற்ற பின் அதற்கான முடிவுகள் மாலை 7.30 மணியளவில் வெளியிடப்படும்.
மே 8, வியாழன் காலை முதலே மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூட ஆரம்பித்தனர். ஏறக்குறைய 12,000 மக்கள் புதிய திருத்தந்தை யார் என்று அறியும் ஆவலுடன் காத்திருந்தனர்.
காலையில் இரண்டு வாக்குப்பதிவுகள், மாலையில் இரண்டு வாக்குப்பதிவுகள் என இன்று நான்கு வாக்குப்பதிவுகள் நடைபெறும். காலையில் நடைபெறும் இரண்டு வாக்குப்பதிவுகளுக்கான முடிவுகள் பிற்பகல் 12.30 மணியளவிலும், மாலையில் நடைபெறும் இரண்டு வாக்குப்பதிவுகளுக்கான முடிவுகள் மாலை 7.30 மணியளவிலும் புகைபோக்கி வழியாக வெளியிடப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்