MAP

வத்திக்கானில் கர்தினால் நிக்கொல்ஸ் வத்திக்கானில் கர்தினால் நிக்கொல்ஸ்  (ANSA)

பல்வேறு திறமைகள் ஒருங்கேயமைந்தவர் நம் திருத்தந்தை

புதிய திருத்தந்தை ஒரு மென்மையான குணம் படைத்தவர், அமைதியானவர், தெளிவான முடிவெடுக்கக் கூடியவர், எந்த எதிரிகளையும் கொண்டிராதவர், நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பல்வேறு திறமைகள் நன்முறையில் ஒருங்கேயமைந்த ஒரு மனிதரை நாம் திருத்தந்தையாக பெற்றுள்ளோம் என இங்கிலாந்து கர்தினால் வின்சென்ட் நிக்கொல்ஸ் கூறினார்.

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் தேர்வில் 133 கர்தினால்களில் ஒருவராக பங்கேற்ற இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், கர்தினால் நிக்கொல்ஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிக்காகோவின் வறிய பகுதியில் பிறந்த புதிய திருத்தந்தை இருமுறை அகுஸ்தீனார் துறவுசபையின் தலைவராகச் செயல்பட்டதுடன், ஓர் ஆசிரியராக, மறைமாவட்ட ஆயராக, திருப்பீட தலைமையக அதிகாரிகளுள் ஒருவராக தன் பணிகளை சிறப்பாக ஆற்றிய ஒரு கர்தினால் என புதிய திருத்தந்தையைப் பாராட்டிய கர்தினால் நிக்கொல்ஸ் அவர்கள், புதிய திருத்தந்தை ஒரு மென்மையான குணம் படைத்தவர், அமைதியானவர், தெளிவான முடிவெடுக்கக் கூடியவர், எந்த எதிரிகளையும் கொண்டிராதவர், நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் குணங்களையும் திறமைகளையும் புகழ்ந்தார்.

தான் ஏனைய கர்தினால்களுடன் திருத்தந்தைக்கான தேர்வில் கலந்துகொண்டது ஓர் ஆன்மீக தியானத்தில் கலந்துகொண்டது போன்று இருந்தது என்ற கர்தினால், இந்த உணர்வு உடன்பிறந்த உணர்வுடனும் ஜெபத்துடன் கூடியதாகவும் இருந்தது எனவும், தனி தனிக்குழுக்கான ஓர் உணர்வு எந்த நேரத்திலும் எவருக்கும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மே 2025, 15:12