MAP

திருத்தந்தையுடன் பல்கேரிய பிரதமர் Zhelyazkov திருத்தந்தையுடன் பல்கேரிய பிரதமர் Zhelyazkov   (ANSA)

திருத்தந்தையுடன் பல்கேரிய பிரதமரின் சந்திப்பு

பத்திரிகையாளர்களை சந்தித்த பல்கேரிய பிரதமர் Zhelyazkov அவர்கள், உக்ரன் போரில் இரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் திருப்பீடம் ஓர் உண்மையான பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பல்கேரியா நாட்டின் பிரதமர் Rosen Dimitrov Zhelyazkov அவர்கள், மே 23, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

ஸ்லாவ் இலக்கியத்திற்கும் பல்கேரிய எழுத்துக்கள் மற்றும் கலாச்சாரத்திற்கும் முன்னோடியாக இருந்த புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியசின் திருவிழா மே மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கு முந்தைய நாள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களைச் சந்தித்த பிரதமர் Zhelyazkov அவர்கள், ஆயரை அடையாளப்படுத்தி நிற்கும் பல வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த வழிபாட்டு தோள் துகில் ஒன்றை பரிசளித்தார்.

திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின் திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்து உரையாடினார் பல்கேரிய பிரதமர்.

வத்திக்கான் அதிகாரிகளுக்கும் பல்கேரிய பிரதமர் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது உக்ரைன் மோதல்கள் குறித்தும், பல்கேரிய நாட்டிற்கு திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திருத்தந்தையுடனான சந்திப்புக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பல்கேரிய பிரதமர் Zhelyazkov அவர்கள், உக்ரைன் போரில் இரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் திருப்பீடம் ஓர் உண்மையான பாலமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

செயற்கை நுண்ணறிவு குறித்தும், பல்கேரியாவிற்கும் திருப்பீடத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும் திருத்தந்தையுடனான தன் உரையாடல் உள்ளடக்கியிருந்ததாக பல்கேரிய பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 மே 2025, 16:12