ரேரும் நோவாரும் திருமடலின் 134-ஆவது ஆண்டு
மெரினா ராஜ் – வத்திக்கான்
தொழிலாளர் உரிமைகள் மற்றும், கடமைகள் பற்றி வலியுறுத்தி வரலாற்றில் முத்திரை பதித்த, ‘ரேரும் நோவாரும்’ (Rerum Novarum) என்ற திருமடல் வெளியிடப்பட்ட 134-ஆவது ஆண்டினை மே 15 வியாழனாகிய இன்று திருஅவை சிறப்பிக்கின்றது.
திருஅவையின் 256-ஆவது திருத்தந்தையாகப் பணியேற்ற திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்கள், 1878-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் நாள் முதல், 1903-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் வரை, 25 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தினார்.
1891ம் ஆண்டு மே மாதம் 15-ஆம் நாள் வெளியிடப்பட்டு வரலாற்றில் முத்திரை பதித்த, ‘ரேரும் நோவாரும்’ (Rerum Novarum) என்ற திருமடலில், தொழிலாளர் உரிமைகள் மற்றும், கடமைகள் பற்றி வலியுறுத்தினார் திருத்தந்தை 13-ஆம் லியோ.
முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே, அரசு மற்றும் குடிமக்களுக்கு இடையே நிலவும் உறவுகள், மற்றும் கடமைகள் பற்றி இம்மடலில் விளக்கியுள்ளார் திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்கள், நவீன கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு அடித்தளமாகக் கருதப்படும், “ரேரும் நோவாரும் என்ற இந்த திருமடல் வழியாக உலகில் சில சனநாயகச் சீர்திருத்தங்கள் இடம்பெறவும் ஆதரவளித்தார்.
திருஅவை 20ம் நூற்றாண்டுக்குள் வாழ இவர் உந்து சக்தியாக இருந்தது மட்டுமன்றி, அது, நவீன உலகு மற்றும், நவீன கலாச்சாரத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சித்தார்.
மேலும் இதே நாளில் தான் திருத்தந்தை 11-ஆம் பயஸ் அவர்கள் 1931-ஆம் ஆண்டு, Quadragesimo anno என்னும் திருமடலையும் திருத்தந்தை 23ஆம் யோவான் Mater et magistra என்னும் திருமடலை 1961 ஆம் ஆண்டும் வெளியிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்