இங்கிலாந்து, ஐரிஷ் மற்றும் காமன்வெல்த் தலைவர்கள் திருத்தந்தைக்கு இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் . வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவைத் தொடர்ந்து பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து வந்துள்ள இரங்கல் செய்திகள்.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
திருத்தந்தையுடனான தனது சந்திப்புகள் குறித்து, அதிலும் குறிப்பாக, இந்த ஏப்ரல் மாதத்தில் அவரைச் சந்தித்தது குறித்து, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் நினைவுகூர்ந்து அவரது மறைவிற்குத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பான கவனம் செலுத்தியவர் என்று கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அவர்கள், அவரது துணிச்சலான தலைமைத்துவத்தையும், பணிவையும் தனது இரங்கல் செய்தியில் பாராட்டியுள்ளார்.
ஸ்காட்லாந்து பிரதமர் ஜான் ஸ்வின்னி
ஸ்காட்லாந்து பிரதமர் ஜான் ஸ்வின்னி அவர்கள், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்பதற்கான திருத்தந்தையின் உறுதிப்பாட்டை தனது இரங்கல் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.
ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின்
ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அவர்கள், குறிப்பாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு, இரக்கம், அமைதி மற்றும் மனித மாண்பைக் காட்டிய திருத்தந்தையின் அர்ப்பணிப்பை தனது இரங்கல் செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.
அயர்லாந்து அரசுத் தலைவர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ்
அயர்லாந்தின் அரசுத் தலைவர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் அவர்கள், முக்கியமான உலகளாவியப் பிரச்சனைகளில் பகிரப்பட்ட மனிதநேயத்திற்கான திருத்தந்தையின் அர்ப்பணிப்பை தனது இரங்கல் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
வடக்கு அயர்லாந்தின் பிரதமர் மிஷேல் ஓ'நீல்,
வடக்கு அயர்லாந்தின் பிரதமர் மிஷேல் ஓ'நீல் அவர்கள், திருத்தந்தையின் இரக்கத்தையும் அமைதிக்கான அவரது ஆதரவையும், குறிப்பாக, புனித வெள்ளி ஒப்பந்தத்தையும் தனது இரங்கல் செய்தியில் பிரதிபலித்துள்ளார்
கனடா பிரதமர் மார்க் கார்னி
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அவர்கள், சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் திருத்தந்தையின் சிறப்பு அக்கறையை எடுத்துரைத்ததுடன், கனடாவில் உள்ள பூர்வகுடி மக்களின் சார்பாக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்கள், திருத்தந்தையின் தலைமைத்துவத்திற்கான அணுகுமுறையையும், மனிதகுலத்தின் மீதான அவரது ஆழ்ந்த இரக்கத்தையும், குறிப்பாக, வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொண்டதையும் தனது இரங்கல் செய்தியில் பாராட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்