பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் திருத்தந்தையின் உடல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 23, புதன்கிழமை காலை 9.00 மணிக்கு, இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடலைத் தாங்கிய அடக்கப்பெட்டி, சாந்தா மார்த்தா இல்லத்தின் கோவிலிலிருந்து புனித பேதுரு பெருங்கோவிலுக்குத் திருத்தந்தையர்களுக்குரிய இறுதித் திருச்சடங்குகள் (Ordo Exsequiarum Romani Pontificis (எண். 41–65) நிறைவேற்றும் சட்டவிதிகளின்படி கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது வத்திக்கான்
அதனைத் தொடர்ந்து, கர்தினால் Kevin Joseph Farrell அவர்களின் தலைமையில் இடம்பெறும் சிறியதொரு இறைவழிபாட்டிற்குப் பிறகு, பேரணி தொடங்கும் என்றும், இது சாந்தா மார்த்தா மற்றும் புனித பேதுரு சதுக்கம் வந்தடைந்து புனித பேதுரு பெருங்கோவிலின் மையக்கதவு வழியாக உள்ளே செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, பெருங்கோவிலின் உள்ளே பாவமன்னிப்பு பலிபீடத்தில் நிகழும் சிறியதொரு இறைவார்த்தை வழிபாட்டிற்கு கர்தினால் Farrell அவர்கள் தலைமை தாங்குவார் என்றும், அதன் முடிவில் திருத்தந்தையின் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடங்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்