திருத்தந்தையின் அடக்கப்பெட்டியை மூடும் சடங்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை மாலை உரோம் உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில் இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 11.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அடக்கப்பெட்டியினை மூடும் சடங்கானது நடைபெற்றது. இவ்வழிபாட்டுச் சடங்கிற்கு கமர்லெங்கோ எனப்படும் திருத்தந்தையின் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர், கர்தினால் Kevin Farrell அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் இவ்வழிபாட்டில் கர்தினால்கள் ஜொவான்னி பத்திஸ்தா ரே, பியெத்ரோ பரோலின், ரோஜர் மஹோனி, தொமினிக் மம்பெர்த்தி, மௌரோ கம்பெத்தி, பல்தசாரே ரெய்னா, கொன்ராடு க்ராயெவிஸ்கி ஆகியோர் முன்னிலையில் திருத்தந்தையின் அடக்கப் பெட்டி மூடப்பட்டு முத்திரையிடப்பட்டது. திருத்தந்தையின் உருவம் அச்சிடப்பட்ட நாணயங்கள், பதக்கங்கள், மற்றும் எதிர்கால தலைமுறையினர் அவரைக் குறித்து அறிந்துகொள்ளும்படி, இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அவரது வரலாற்றுக் குறிப்புக்களைக் கூறும் (Rogito) ரோஜிதோ ஆகியவை உலோக உருளைக்குள் வைத்து அடக்கப்பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்