MAP

வத்திக்கானில் நடைபெற்ற இரண்டாவது கர்தினால்கள் பொது சபை

இரண்டாவது பொது சபைக்காக கர்தினால்கள் ஒன்றுகூடி, மறைந்த திருத்தந்தைக்காக பண்டைய ஒன்பது நாள் (Novemdiales) துக்கக் கால திட்டத்தை அங்கீகரித்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானில் இரண்டாவது கர்தினால்கள் பொது சபை ஆயர் மாமன்ற அரங்கத்தில் ஏப்ரல் 23, புதன் மாலை ஏறத்தாழ 5 மணிக்குத் தொடங்கி, மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் 103 கர்தினால்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 'வாரும் தூய ஆவியே' என்ற இறைவேண்டல் பாடலுடன் கூட்டத்தைத் தொடங்கினர், பின்னர் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மா நிறையமைதிபெற இறைவேண்டல் செய்தனர்.

மேலும் ஏப்ரல் 22, இச்செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற பொது சபையில் கலந்து கொள்ளாத கர்தினால்கள் இக்கூட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மறைந்த திருத்தந்தைக்காக பண்டைய ஒன்பது நாள்  (Novemdiales) துக்கக் கால நடைமுறை திட்டத்தையும் அங்கீகரித்தனர்.

ஏப்ரல் 24, வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு மூன்றாவது பொது சபைக்காக கர்தினால்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஏப்ரல் 2025, 16:06