MAP

திருத்தந்தையின் உடலை தரிசிக்க வளாகத்தில் குழுமியிருக்கும் கூட்டம் திருத்தந்தையின் உடலை தரிசிக்க வளாகத்தில் குழுமியிருக்கும் கூட்டம் 

திருத்தந்தையின் அடக்கத் திருப்பலியில் 130 உயர்மட்ட பிரதிநிதிகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டாலும், அவரின் இறுதி அடக்கத் திருப்பலி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெறும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் பல்வேறு நாடுகளின் 130 பிரதிநிதிகள் குழு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அடக்கச் சடங்கில் கலந்துகொள்ளும் என திருப்பீடச் செயலகம் வெளியிட்ட அறிக்கை எடுத்துரைக்கிறது.

இந்த 130 பிரதிநிதிகள் குழுவில், 50 அரசுத் தலைவர்களும் 10 முடியரசுகளின் தலைவர்களும் உள்ளடக்கம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டாலும், அவரின் இறுதி அடக்கத் திருப்பலி  வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே இடம்பெறும்.

இந்த அடக்கத் திருப்பலியில் மனைவி மெலானியுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப், இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா, திருத்தந்தையின் தாய்நாடான அர்ஜெண்டினாவின் அரசுத்தலைவர் ஹாவியேர் மிலெய், இந்திய அரசுத்தலைவர் ஶ்ரீமதி திரௌபதி முர்மு, மற்றும், பிரான்ஸ், பிலிப்பீன்ஸ், உக்ரைன், போலந்து, தொமினிக்கன் குடியரசு, க்ரோவேசியா, ஈக்குவதோர், மொல்தோவா, லாத்வியா, பிரேசில் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்கள், இங்கிலாந்து, அயர்லாந்து, நியூஸிலாந்து ஆகியவைகளின் பிரதமர்கள், பெல்ஜியம், ஸ்வீடன், இஸ்பெயின் ஆகியவைகளின் மன்னர்கள், இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் வில்லியம், நார்வேயின் இளவரசர் ஹாக்கோன், ஐநா. பொதுச்செயலர் அந்தோனியோ குட்டாரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா ­பான் தெர் லெயன் ஆகியோர் உட்பட ஏறக்குறைய 130 உயர்மட்ட பிரதிதிகள் குழு இடம் பெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2025, 15:12