MAP

தூய தொன்போஸ்கோ தூய தொன்போஸ்கோ  

இயேசுவைப் பற்றிய ஆர்வம், அர்ப்பண மனநிலை கொண்டவர்களாக வாழ...

இறைவனின் அன்பில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, நமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்குப் பணியாற்றவேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூய ஆவியாருக்கு செவிசாய்த்து, நம்பிக்கை, அர்ப்பணிப்பு, தெளிந்து தேர்தல் ஆகியவற்றுடன் வாழ வேண்டும் என்றும், இயேவைப் பற்றிய ஆர்வமும், இளையோர்க்கான அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 16 தொடங்கப்பட்டு ஏப்ரல் 12 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சலேசிய சபையின் 29-ஆவது பொதுப்பேரவையில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 7, திங்கள்கிழமை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சலேசிய சபையின் நிறுவனரான தூய தொன்போஸ்கோ அர்ஜெண்டினாவிற்கு மறைப்பணியாளராக சென்ற 150 -ஆவது ஆண்டினை நினைவுகூரும் இக்காலத்தில், தொலைவில் இருந்தாலும், தூய ஆவியாருக்கு செவிசாய்த்து, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன், ஒருங்கிணைந்த பயணத்தின் தெளிந்து தேர்தலுடன் வாழ ஊக்கமூட்டியுள்ளார் திருத்தந்தை.

“கிறிஸ்துவைப் பற்றிய ஆர்வமும், இளையோர்க்கான அர்ப்பணமும் கொண்ட சலேசியர்கள்” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்படும் இந்த 29-ஆவது பொதுப்பேரவையில் தூய தொன்போஸ்கோ போல வாழ இளையோர் பணியில் ஆர்வம் கொண்டு வாழ வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.     

இறைவனின் அன்பில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, நமக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்குப் பணியாற்றவேண்டும் என்றும், தூய தொன்போஸ்கோ போல சவால்களை எதிர்கொண்டு, நம்பிக்கையும் உற்சாகமும் மாறாமல், வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஏப்ரல் 2025, 13:15