நாம் ஒரு சிறந்த மனிதரை, நமது ஆதரவாளரை இழந்துவிட்டோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துன்புறும் தெற்கு சூடானின் மக்களுக்கு ஆறுதலையும் அன்பையும் வழங்கியவர் என்று வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் ஜூபாவின் பேராயர் ஸ்டீபன் அமேயு.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறப்பு தெற்கு சூடான் மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், மோதல்கள் மத்தியில் அம்மக்கள் அவரைத் தங்களின் ஒரே ஆதரவாளராகக் கண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தெற்கு சூடான் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதில் உறுதியுடன் இருந்தார் என்றும், அந்நாட்டின் போர் நிறைந்த சூழலை மனதில்கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அங்குத் திருத்தூதுப் பயணம் ஒன்றை மேற்கொண்டார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் அமேயு.
திருத்தந்தையின் இருப்பு, குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களுக்கு நம்பிக்கையைத் தந்தது, என்றும், அவரது வார்த்தைகள் அப்பகுதியைப் பாதிக்கும் மோதல்கள் மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள் இரண்டையும் ஒப்புக்கொண்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் அமேயு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்