MAP

தவக்கால தியானத்தில் பங்கேற்றவர்கள் தவக்கால தியானத்தில் பங்கேற்றவர்கள்  

வத்திக்கானில் ஆரம்பமாகிய தவக்கால தியானம்

உரோமில் வசிக்கும் கர்தினால்கள், திருப்பீடத்துறையின் தலைவர்கள் மற்றும் உரோமன் கூரியாவின் மேலதிகாரிகள் என அனைவரோடும் இணைந்து தவக்கால தியானத்தினைத் வழக்கமாக செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சைக் காராணமாக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அங்கிருந்து காணொளி வாயிலாக இத்தியானத்தில் பங்கேற்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மார்ச் 14, வெள்ளிக்கிழமை வரை தவக்காலத்தை முன்னிட்டு தியானமானது வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கப்பூச்சின் சபை அருள்பணியாளர் ரொபர்த்தோ பசோலினி அவர்கள் தலைமையில்  நடைபெறுகின்றது.

உரோமில் வசிக்கும் கர்தினால்கள், திருப்பீடத்துறையின் தலைவர்கள் மற்றும் உரோமன் கூரியாவின் மேலதிகாரிகள் என அனைவரோடும் இணைந்து தவக்கால தியானத்தினைத் வழக்கமாக செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சைக் காராணமாக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அங்கிருந்து காணொளி வாயிலாக இத்தியானத்தில் பங்கேற்றார்.

மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை மாலை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 9. 30 மணியளவில் நடைபெற்ற நிலைவாழ்விற்கான எதிர்நோக்கு என்ற இத்தியானத்தின் முதல் பகுதியினை “முடிவு ஆரம்பமாக இருக்கும்” என்ற தலைப்பில் அருள்பணியாளர் ரொபர்த்தோ பசோலினி அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மரணம் என்பது முடிவல்ல, இயேசுவுடனான நிலையான வாழ்க்கைக்கான பாதை என்றும், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவின் இறப்பிலும் உயிர்ப்பிலும் நாம் இணைக்கப்பட்டுள்ளோம், புதிய வாழ்க்கையை நாம் அணுகுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் அருள்பணி ரொபர்த்தோ பசோலினி.

மீட்பு என்பது இயேசுவை அதிகாரப்பூர்வமாக அறிந்தவர்களுக்கு மட்டுமானது என்று சிறப்பாக ஒதுக்கிவைக்கப்பட்டதல்ல, ,மாறாக மீட்பு என்பது அனைவருக்குமானது என்றும், தூய சிலுவை யோவான் குறிப்பிடுவது போல “வாழ்வின் இறுதி நாளில் நாம் அனைவரும் அன்பினால் தீர்ப்பளிக்கப்படுவோம்” என்றும் கூறினார் அருள்பணி ரொபர்த்தோ.

மனிதனின் இறுதிக்காலமானது, விண்ணகம், நரகம், தண்டனை பெறுமிடம் என்னும் மூன்று நிலைகளில் உள்ளது என்று தெரிவித்த அருள்பணி பசோலினி அவர்கள், கிறிஸ்துவுடனான நமது அடையாளத்தைக் கண்டறியும் இடம் விண்ணகம், கடவுளிடமிருந்து நம்மை நிரந்தரமாகப் பிரிக்கும் இடம் நரகம், இறையருளைப் பெறுவதற்காக, நமது பாவங்களுக்காக மனம் வருந்தி விண்ணகத்தை எதிர்நோக்கி இருக்கும் இடம் தண்டனை பெறும் இடம் என்றும் கூறினார்.

நமது வாழ்க்கை விதியானது பயத்தில் எழுதப்படவில்லை, மாறாக நம்பிக்கையில் எழுதப்பட்டுள்ளது என்றும், மரணம் என்பது ஒரு தோல்வியல்ல, கடவுளின் முகத்தை வாழ்வின் இறுதியில் பார்க்கும் தருணம் முடிவு அல்ல, ஆரம்பம் மட்டுமே என்றும் எடுத்துரைத்தார் அருள்பணி ரொபர்த்தோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 மார்ச் 2025, 15:15